4-ஐசோபுரோப்பீனைல்பீனால்
4-ஐசோபுரோப்பீனைல்பீனால் (4-Isopropenylphenol) என்பது C9H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH2=(CH3)CC6H4OH என்ற கட்டமைப்பில் அமைந்துள்ள இச்சேர்மத்தில் இரண்டு புரோப்பீனைல் (CH2=C-CH3) குழுக்கள் பீனாலின் நான்காவது நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. பல்கார்பனேட்டு நெகிழி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிசுபீனால் ஏ என்ற வேதிப்பொருள் தயாரிப்பின் போது இடைநிலை வேதிப்பொருளாக 4-ஐசோபுரோப்பீனைல்பீனால் கிடைக்கிறது. 2007 ஆம் ஆண்டில் 2.7 மீட்டர் கிலோகிராம்/ஆண்டு என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டது. பாரா-பாரா பிசுபீனால் ஏ சேர்மத்தின் உற்பத்தியில் உடன் விளைபொருளாக உருவாகும் ஆர்த்தோ-பாரா பிசுபீனால் ஏ மாற்ரியத்தை மறு சுழற்சி செய்தும் 4-ஐசோபுரோப்பீனைல்பீனால் தயாரிக்கமுடியும்.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாரா-ஐசோபுரோப்பீனைல்பீனால்
| |
இனங்காட்டிகள் | |
4286-23-1 | |
ChEMBL | ChEMBL277808 |
ChemSpider | 507836 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 584247 |
| |
UNII | 2QP218C90D |
பண்புகள் | |
C9H10O | |
வாய்ப்பாட்டு எடை | 134.18 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 83 °C (181 °F; 356 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H371 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுபிசுபீனால் ஏ சேர்மத்தின் உயர்-வெப்பநிலை நீராற்பகுப்பு வினையின் மூலம் பீனாலுடன் சேர்ந்து 4-ஐசோபுரோப்பீனைல்பீனால் கலவை உருவாகிறது.:[2]
- (CH3)2C(C6H4OH)2 + H2O → CH2=(CH3)CC6H4OH + C6H5OH
4-ஐசோபுரோப்பைல்பீனாலின் வினையூக்க ஐதரசன் நீக்க வினை மூலமாகவும் இந்த சேர்மத்தை உருவாக்க முடியும்.[3]
4-ஐசோப்ரோப்பீனைல்பீனால் கந்தக அமிலத்தின் மூலம் O-புரோட்டானேற்றத்திற்கு உட்பட்டு, கார்போ நேர்மின் அயனியை அளிக்கிறது, இது பல்வேறு இருபடி வினைகளுக்கு உட்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ de Angelis, A.; Ingallina, P.; Perego, C. (2004). "Solid Acid Catalysts for Industrial Condensations of Ketones and Aldehydes with Aromatics". Industrial & Engineering Chemistry Research 43 (5). doi:10.1021/ie030429+.
- ↑ Hunter, Shawn E.; Felczak, Claire A.; Savage, Phillip E. (2004). "Synthesis of p-isopropenylphenol in high-temperature water". Green Chemistry 6 (4): 222. doi:10.1039/b313509h.
- ↑ Corson, B. B.; Heintzelman, W. J.; Schwartzman, L. H.; Tiefenthal, H. E.; Lokken, R. J.; Nickels, J. E.; Atwood, G. R.; Pavlik, F. J. (1958). "Preparation of Vinylphenols and Isopropenylphenols". The Journal of Organic Chemistry 23 (4): 544–549. doi:10.1021/jo01098a012.
- ↑ Chen, Wei-Fu; Lin, Hsing-Yo; Dai, Shenghong A. (2004). "Generation and Synthetic Uses of Stable 4-[2-Isopropylidene]-phenol Carbocation from Bisphenol A". Organic Letters 6 (14): 2341–2343. doi:10.1021/ol0493305. பப்மெட்:15228274.