4-ஐசோபுரோப்பைல்பீனால்
4-ஐசோபுரோப்பைல்பீனால் (4-Isopropylphenol) என்பது (CH3)2CHC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். பாரா-ஐசோபுரோப்பைல்பீனால் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. பீனால் கட்டமைப்பின் பாரா நிலையில் ஓர் ஐசோபுரோபைல் குழு இணைந்திருந்தால் அதை 4-ஐசோபுரோப்பைல்பீனால் எனலாம். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக 4-ஐசோபுரோபைல் பீனால் காணப்படுகிறது. புரோப்பைலீனைச் சேர்த்து பீனாலை ஆல்கைலேற்றம் செய்து 4-ஐசோபுரோப்பைல்பீனால் தயாரிக்கப்படுகிறது. வர்த்தக வேதியியலில் வியாபாரப் பொருளாகக் கருதப்படும் பிசுபீனால் ஏ என்ற வேதிப்பொருளின் உற்பத்திக்கு இச்சேர்மம் பொருத்தமானதாகும். பீனாலின் அல்கைலேற்றம் மற்றும் புரோப்பைலீனுடன் பல்வேறு கிரெசால்களை சேர்த்து 4-ஐசோபுரோப்பைல்பீனால் தயாரிக்கும் முறைகள் நன்கு வளர்ந்துள்ளன. வினையில் பயன்படுத்தப்படும் வினையூக்கிகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, 4-ஐசோபுரோப்பைல்பீனால், 2-ஐசோபுரோப்பைல்பீனால், 2,6-ஈரைசோபுரோப்பைல்பீனால் மற்றும் 2,4,6-2-மூவைசோபுரோப்பைல்பீனால் ஆகியவற்றையும் தயாரிக்க முடியும்.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாரா-ஐசோபுரோப்பைல்பீனால்
| |
இனங்காட்டிகள் | |
99-89-8 | |
ChEBI | CHEBI:167172 |
ChEMBL | ChEMBL29966 |
ChemSpider | 7185 |
EC number | 202-798-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7465 |
| |
UNII | 9F59JOO816 |
பண்புகள் | |
C9H12O | |
வாய்ப்பாட்டு எடை | 136.19 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 62 °C (144 °F; 335 K) |
கொதிநிலை | 230 °C (446 °F; 503 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H312, H314, H332 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதிப் பண்புகள்
தொகு4-ஐசோபுரோப்பைல்பீனால் வினையூக்கி ஒன்றைப் பயன்படுத்தி ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்த முடியும். இவ்வினையில் பாரா-ஐசோபுரோப்பீனைல்பீனால் உருவாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "4-Isopropylphenol". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313
- ↑ Corson, B. B.; Heintzelman, W. J.; Schwartzman, L. H.; Tiefenthal, H. E.; Lokken, R. J.; Nickels, J. E.; Atwood, G. R.; Pavlik, F. J. (1958). "Preparation of Vinylphenols and Isopropenylphenols". The Journal of Organic Chemistry 23 (4): 544–549. doi:10.1021/jo01098a012.