4-ஐதராக்சிபீனைல்பைருவிக் அமிலம்
4-ஐதராக்சிபீனைல்பைருவிக் அமிலம் (4-Hydroxyphenylpyruvic acid) C9H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-(4-ஐதராக்சிபீனைல்)-2-ஆக்சோபுரோப்பனாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
4-ஐதராக்சிபீனைல்பைருவேட்டு
பாரா-ஐதராக்சிபீனைல்பைருவிக் அமிலம் பாரா-ஐதராக்சிபீனைல்பைருவேட்டு | |
இனங்காட்டிகள் | |
156-39-8 | |
ChEBI | CHEBI:15999 |
ChEMBL | ChEMBL607712 |
ChemSpider | 954 |
DrugBank | DB07718 |
IUPHAR/BPS
|
6629 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01179 |
பப்கெம் | 979 |
| |
UNII | 0YP1694WNQ |
பண்புகள் | |
C9H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 180.157 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனைல் அலானின் என்ற அமினோ அமிலத்தின் வளர்சிதைமாற்றத்தில் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இது கிடைக்கிறது. ஆக்சோகார்பாக்சிலிக் அமிலத்தின் கட்டமைப்பில் உள்ள மெத்தில் ஐதரசன்களில் ஒன்று 4-ஐதராக்சிபீனைல் தொகுதியால் இங்கு பதிலீடு செய்யப்பட்டுள்ளது.[1]
பீனைல் அலானின் கட்டமைப்பில் உள்ள அரோமாட்டிக் பக்கச் சங்கிலி பீனைல் அலானின் ஐதராக்சிலேசு என்ற நொதியால் ஐதராக்சிலேற்றம் செய்யப்படும் வினையினால் டைரோசின் என்ற அமினோ அமிலம் உருவாகிறது. டைரோசின் அமினோடிரான்சுபெரேசு என்ற நொதியின் வினையூக்கத்தால் டைரோசினை 4-ஐதராக்சிபீனைல்பைருவிக் அமிலமாக மாற்ற இயலும். [2] மேலும், 4-ஐதராக்சிபீனைல்பைருவிக் அமிலத்தை 2,5-ஈரைதராக்சிபீனைல் அசிட்டிக் அமிலம் என்ற பீனாலிக் அமிலமாகவும் மாற்ற இயலும். ஆக்ரோனாட்டிக் சாயம் தயாரிப்பில் 2,5-ஈரைதராக்சிபீனைல் அசிட்டிக் அமிலம் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. [3]
சிகைட்டோனெமின் சாயத்தின் உயிர்த்தொகுப்பு வினை தயாரிப்பில் ஓர் இடைநிலையாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ PubChem. "4-Hydroxyphenylpyruvic acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
- ↑ Brand, Larry; Harper, Alfred (1974). "Effect of glucagon on phenylalanine metabolism and phenylalanine-degrading enzymes in the rat". Biochemical Journal 142 (2): 231–45. பப்மெட்:4155291.
- ↑ Denoya, Claudio; Skinner, Deborah; Morgenstern, Margaret (September 1994). "A Streptomyces avermitilis gene encoding a 4-hydroxyphenylpyruvic acid dioxygenase-like protein that directs the production of homogentisic acid and an ochronotic pigment in Escherichia coli". Journal of Bacteriology 1 (17): 5312–5319.