55 வார்த்தை சிறுகதை

55 வார்த்தை சிறுகதை என்பது ஐம்பத்து ஐந்து வார்த்தைகள் மட்டும் கொண்ட ஒரு குறுஞ்சிறுகதை வடிவமாகும். ஐம்பத்து ஐந்து வார்த்தைகளுக்கு மிகாமல் இச்சிறுகதை இருக்கும். கதையின் எல்லா விஷயங்களையும் கூறாமல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவது இந்த வகை கதைகளில் உள்ள சிறப்பாகும். 1987ல் கலிஃபோர்னிய, நியூ டைம்ஸ் என்ற வார இதழில் முதல் 55 வார்த்தை சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் இவ்வடிவ சிறுகதைகள் பலவற்றை சுஜாதா எழுதியுள்ளார்.[1][2][3]

பண்புகள் தொகு

55 வார்த்தை சிறுகதை இலக்கியத்தின் பண்புகள்

  1. ஐம்பத்தைந்து வார்த்தைகள் மிகாமல் அல்லது குறையாமல் இருக்க வேண்டும்.(சில சமயங்களில் விதிவிலக்குகள் உண்டு)
  2. ஒன்று அல்லது பல கதாப்பத்திரங்கள் இருக்கலாம்.
  3. ஒரு கதைச் சூழல், ஒரு தீர்வு அல்லது திருப்பம்
  4. ஏழு வார்த்தைகளுக்கு மிகாத தலைப்பு. ஆனால் இந்த வார்த்தைகள் கதையுடன் எண்ணப்படுவதில்லை.
  5. எண்களும் கணக்கில் உண்டு 45, 100, 4558 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!
  6. நிறுத்தக் குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.

மேற்கோள்கள் தொகு

  1. "Winners named in WLU drabble competition" பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம், Waterloo Region Record, October 1, 2011.
  2. "Flash fiction: 'Intense, urgent and a little explosive'", The Irish Times, October 26, 2011, copy available here from HighBeam Research (subscription required).
  3. Sarah Womer, "AWC professor impressed by short story entries", Yuma Sun, December 21, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=55_வார்த்தை_சிறுகதை&oldid=3751958" இலிருந்து மீள்விக்கப்பட்டது