8006 அலுமினியம் உலோகக்கலவை
8006 அலுமினியம் உலோகக்கலவை (8006 aluminium alloy) இரும்பு, மாங்கனீசு மற்றும் தாமிரம் தனிமங்களை கூட்டுசேர் பொருள்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக மெல்லிய தாள்கள் அல்லது படலங்களாக உருட்டப்படுகிறது. இதன் அரிப்பு எதிர்ப்பின் காரணமாக வெப்பப் பரிமாற்றிகளாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 8006 அலுமினியம் தகடுகளாகக் கிடைக்கிறது.[1]
வேதி இயைபு
தொகுதனிமம் | உட்கூறு (%) |
---|---|
அலுமினியம் | ≥ 95.9 |
இரும்பு | 1.2-2.0 |
மாங்கனீசு | 0.3-1.0 |
தாமிரம் | < 0.3 |
பயன்பாடுகள்
தொகுஅலுமினியம் 8006 உலோகக் கலவை உணவுப் பொதிகள் கட்டவும், நுண் மின்னியல் மற்றும் வெப்பப் பரிமாற்றிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sathish, T.; Tharmalingam, S.; Mohanavel, V.; Ashraff Ali, K. S.; Karthick, Alagar; Ravichandran, M.; Rajkumar, Sivanraju (2021-07-22). Ţălu, Ştefan. ed. "Weldability Investigation and Optimization of Process Variables for TIG-Welded Aluminium Alloy (AA 8006)" (in en). Advances in Materials Science and Engineering 2021: 1–17. doi:10.1155/2021/2816338. பன்னாட்டுத் தர தொடர் எண்:1687-8442.
- ↑ Moldovan, P.; Popescu, Gabriela; Miculescu, F. (2004). "Microscopic study regarding the microstructure evolution of the 8006 alloy in the plastic deformation process". Journal of Materials Processing Technology 153-154: 408–415. doi:10.1016/j.jmatprotec.2004.04.345. பன்னாட்டுத் தர தொடர் எண்:0924-0136. https://doi.org/10.1016/j.jmatprotec.2004.04.345.