8090 அலுமினியம் உலோகக்கலவை

அலுமினியத்தின் கலப்புலோகம்

8090 அலுமினியம் உலோகக்கலவை (8090 aluminium alloy) இலித்தியம், தாமிரம், மக்னீசியம் ஆகிய உலோகங்கங்களை கூட்டுசேர் பொருள்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. 8090 அலுமினியம் 2114 மற்றும் 2024 உலோகக் கலவைகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. அதிக மீள் குணகம் மற்றும் குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளது.

வேதி இயைபு

தொகு
தனிமம் உட்கூறு (%)
அலுமினியம் ≥ 93
இலித்தியம் 2.2-2.7
தாமிரம் 1.0-1.6
மக்னீசியம் 0.6-1.3

பயன்பாடுகள்

தொகு

அலுமினியம் 8090 இதன் குறைந்த அடர்த்தி காரணமாக விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக இது இராணுவ உலங்கூர்தியான அகசுட்டாவெசுட்லேண்டு ஈஎச்101 வானூர்தியில் பயன்படுத்தப்படுகிறது.[1] 8090 உலோகக் கலவையை வெளியேற்றவும் முடியும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Li, Shuang–Shuang; Yue, Xin; Li, Qing–Yuan; Peng, He–Li; Dong, Bai–Xin; Liu, Tian–Shu; Yang, Hong–Yu; Fan, Jun et al. (2023-11-01). "Development and applications of aluminum alloys for aerospace industry". Journal of Materials Research and Technology 27: 944–983. doi:10.1016/j.jmrt.2023.09.274. பன்னாட்டுத் தர தொடர் எண்:2238-7854. 
  2. Reynolds, M.; Creed, E. (1987). "The Development of 8090 and 8091 Alloy Extrusions" (in en). Journal de Physique Colloques 48 (C3): C3. doi:10.1051/jphyscol:1987323. https://hal.science/jpa-00226553. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=8090_அலுமினியம்_உலோகக்கலவை&oldid=4088172" இலிருந்து மீள்விக்கப்பட்டது