9,10-இருபுரோமோ ஆந்திரசீன்
9,10-இருபுரோமோ ஆந்திரசீன் (9,10-Dibromoanthracene) என்பது ஆந்திரசீனின் மைய வளையத்தில் இரு புரோமின் அணுக்கள் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.ஓர் அணுசக்தி நுண்ணோக்கி மற்றும் வரியோட்ட புழைவழி நுண்ணோக்கி ஆகியவற்றால் ஒரு வேதியியல் வினை காணப்பட்ட முதல் ஒற்றை மூலக்கூறு 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் என்பது குறிப்பிடத்தக்கது. [1]
இனங்காட்டிகள் | |
---|---|
523-27-3 | |
ChEMBL | ChEMBL3183379 |
ChemSpider | 61529 |
EC number | 208-342-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68226 |
| |
UNII | 61CP7C5Y82 |
பண்புகள் | |
C14H8Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 336.03 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335, H400, H410 | |
P261, P264, P271, P273, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P391 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇயன் எம். எயில்பிரான் மற்றும் சான் எசு. ஈடன் ஆகியோர் 1923 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருங்கிணைந்து 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் தயாரித்தனர். [1]
பண்புகள்
தொகு9,10-இருபுரோமோ ஆந்திரசீன் மின் ஒளிர்வு பண்பைக் கொண்ட வேதிச் சேர்மமாகும். நீல நிற ஒளியை இச்சேர்மம் உமிழ்கிறது. [2]
வினைகள்
தொகுகார்பன்-புரோமின் பிணைப்புகளை வரியோட்ட புழைவழி நுண்ணோக்கியின் மூலம் மின்னழுத்த துடிப்புகளைப் பயன்படுத்தி இரண்டு தொடர்ச்சியான படிகளில் தனித்தனியாகப் பிரிக்கலாம். இதன் விளைவாக உருவாகும் கார்பன் இயங்குருபுகள் சோடியம் குளோரைடு அடி மூலக்கூறு மூலம் 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் மீது நிலைநிறுத்தப்படுகின்றன. மேலும் கூடுதலான மின்னழுத்த துடிப்புகள் பெர்க்மேன் சுழற்சி வினை வழியாக ஈரியங்குருபுகளை ஒரு டையினுக்கு மாறுகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "9,10-Dibromoanthracene". American Chemical Society (in ஆங்கிலம்).
- ↑ Brar, Sukhwinder Singh; Mahajan, Aman; Bedi, R. K. (10 January 2014). "Structural, optical and electrical characterization of hot wall grown 9,10-dibromoanthracene films for light emitting applications". Electronic Materials Letters 10 (1): 199–204. doi:10.1007/s13391-013-3153-8.
- ↑ Borman, Stu (2016). "Chemists Nudge Molecule To React Then Watch Bonds Break And Form". 94. p. 7. https://cen.acs.org/articles/94/i5/Chemists-Nudge-Molecule-React-Watch.html.