90 பாகைகள் கிழக்கு

90 பாகைகள் கிழக்கு (90 Degrees East) என்பது அண்டார்டிகா கண்டத்திலுள்ள ஒர் ஏரியாகும். 2000 சதுர கிலோமீட்டர்கள் (770 சதுர மைல்கள்) பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி 90° கி ஏரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. வசுதோக் ஏரிக்கு அடுத்து அளவில் இரண்டாவது பெரிய பனியாற்றடி ஏரியாக 90 பாகைகள் கிழக்கு ஏரி விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சோவெட்சுகயா பனியாற்றடி ஆறு கண்டுபிடிக்கப்பட்டபொழுது இதுவும் கண்டறியப்பட்டது[1]. கிழக்கு நெடுவரையில் 90 ஆவது நிலையில் அமைந்திருப்பதனால் இந்த ஏரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டது.

90 பாகைகள் கிழக்கு
அமைவிடம்அண்டார்ட்டிகா
ஆள்கூறுகள்77°24′S 90°0′E / 77.400°S 90.000°E / -77.400; 90.000
வகைபனியாற்றடி
வடிநில நாடுகள்(அண்டார்டிகா)
மேற்பரப்பளவு2,000 கி.மீ²

மேற்கோள்கள் தொகு

  1. Robin Bell and Michael Studinger, Geophysical researchers from Columbia University, published in Geophysical Research Letters
"https://ta.wikipedia.org/w/index.php?title=90_பாகைகள்_கிழக்கு&oldid=2162109" இலிருந்து மீள்விக்கப்பட்டது