வஸ்தோக் ஏரி
வஸ்தோக் ஏரி (Lake Vostok, உருசியம்: Озеро Восток, "கிழக்கு ஏரி") என்பது அண்டார்க்டிக்காவின் மேற்பரப்புக்குக் கிட்டவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 140 இற்கும் அதிகமான பனியாற்றடி ஏரிகளில் மிகப் பெரியதாகும். இதன் மேலுள்ள பனி கிட்டத்தட்ட 400,000 ஆண்டுகளாக இருந்தாலும், ஏரியில் உள்ள நீர் 15 முதல்[1][2] 25 மில்லியன் ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது[3].
வஸ்தோக் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 77°30′S 106°00′E / 77.500°S 106.000°E |
வகை | பனியாற்றஇ ஏரி |
வடிநில நாடுகள் | - அண்டார்க்டிக்கா |
அதிகபட்ச நீளம் | 250கிமீ |
அதிகபட்ச அகலம் | 50கிமீ |
மேற்பரப்பளவு | 15,690கிமீ |
சராசரி ஆழம் | 344மீ |
அதிகபட்ச ஆழம் | ~1,000 மீ |
நீர்க் கனவளவு | 5,400 கிமீ3 ± 1,600 கிமீ3 |
நீர்தங்கு நேரம் | 13,300 ஆண்டுகள் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | ~-500 மீ |
Islands | 1 |
குடியேற்றங்கள் | வஸ்தோக் மையம் |
வஸ்தோக் ஏரி கிழக்கு அண்டார்க்டிக் பனிக்கட்டிப் படலத்தில் தெற்குக் குளிர் முனையில் உருசியாவின் வஸ்தோக் நிலையத்தின் கீழே அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரியின் மேற்பரப்பு பனிக்கட்டி மேற்பரப்பின் கீழே கிட்டத்தட்ட 4,000 மீட்டர்கள் (கடல் மட்டத்திற்குக் கீழே கிட்டத்தட்ட 500 மீ) ஆழத்தில் உள்ளது.
உருசியாவின் ஆய்வாளர் குழு ஒன்று 2012 பெப்ரவரி 5 ஆம் நாள் பனி மேற்பரப்பைத் துளைத்து 3,768 மீ (12,400 அடி) நீள பனித்துளையை உருவாக்கி, வஸ்தோக் ஏரியின் மேற்பரப்பை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்[4]. வஸ்தோக் ஏரியின் நன்னீரின் மாதிரிகளை 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அண்டார்க்டிக் கோடைக் காலம் ஆரம்பத்திலேயே சேகரிக்க முடியும் என நம்பப்படுகிறது[5]. அதே வேளையில், ஏரியில் இருந்து நன்னீர் மாதிரிகளைச் சேகரிக்க தானியங்கி ஒன்றைக் கீழே அனுப்பவும் உருசியர்கள் தீர்மானித்துள்ளார்கள். பனிக்கட்டியின் கீழே உள்ள சூழ்மண்டலம் பல மில்லியன் ஆண்டுகளாக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால் ஏரியின் நீர்ப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் நம்பப்படுகிறது[5][6][7].
மேற்கோள்கள்
தொகு- ↑ Moskvitch, K (27 January 2011). "Lake Vostok drilling in Antarctic 'running out of time'". பிபிசி. http://www.bbc.co.uk/news/science-environment-12275979. பார்த்த நாள்: 28 January 2011.
- ↑ Secrets of Antarctica's 15-Million Year-Old Lake -A Galaxy Classic பரணிடப்பட்டது 2008-03-16 at the வந்தவழி இயந்திரம் (5 December 2007)
- ↑ Studinger, M (2008). "Subglacial Lake Vostok". Columbia University. பார்க்கப்பட்ட நாள் 1 February 2011.
- ↑ "Russians drill into previously untouched Lake Vostok below Antarctic glacier". வாசிங்டன் போஸ்ட். 6 பெப்ரவரி 2012. http://www.washingtonpost.com/national/health-science/russians-drill-into-previously-untouched-lake-vostok-below-antarctica/2012/02/06/gIQAGziNuQ_story.html. பார்த்த நாள்: 6 பெப்ரவரி 2012.
- ↑ 5.0 5.1 'Lost World' reached: 20 million yr old Antarctic lake 'drilled' RT
- ↑ "Lake Vostok: Russian scientists drilling into 'alien' Antarctic lake buried for 20m years | Mail Online". Dailymail.co.uk. பார்க்கப்பட்ட நாள் 7 February 2012.
- ↑ "Lake Vostok mystery: Alien life, global warming and Hitler's archive". RT. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012.
வெளி இணைப்புகள்
தொகு
- About Lake Vostok
- "Lake Vostok: A Curiosity or a Focus for Interdisciplinary Study? பரணிடப்பட்டது 2020-04-27 at the வந்தவழி இயந்திரம்" (1998)
- Letter of Appeal to Russia பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Video documentary on Lake Vostok பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today