ஃபாக்சு பீ2

ஃபாக்சு பீ2 (FOXP2 - Forkhead box protein P2) என்பது ஃபாக்சு பீ2 மரபணு என்றழைக்கப்படும் மரபணுவினால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரதமாகும். இந்த மரபணு, வோல்ஃப்காங் எனார்ட் (Wolfgang Enard) என்ற ஆராய்ச்சியாளரால் மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும். இவரும் இவரது ஆய்வுக் குழுமமும் செய்த ஆய்வுகளின்படி, மனித இனத்தில் பேச்சுத் திறன், மொழி என்பன விருத்தியடைந்தமைக்கும், இந்த மரபணு, மற்றும் அதிலிருந்து உருவாகும் புரதத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு அறியப்பட்டது[1]. பேச்சுத் திறன், மொழிப் பாவனையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், இந்தக் குறிப்பிட்ட புரதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதாக அறியப்பட்டுள்ளது[2].

மிகச்சிறிய மூலக்கூறுகளின் முப்பரிமாணப் படிமங்களை, மூலக்கூற்று உயிரியல் அடிப்படையில் ஆய்வறிந்து பார்க்க உதவும் PyMOL எனப்படும் திறமூல மென்பொருள் மூலம் பெறப்பட்ட ஒரு ஃபாக்சு பீ2 புரதத்தின் மாதிரிப்படம்

விவரங்கள்

தொகு

மாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப்காங் எனார்ட். இவர் மனிதனின் மொழி, பேசும் திறன் ஆகியவற்றிற்கான பல மரபணுக்களில், முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார்.[3] கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு உந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர்.

முதல் மொழியும் தமிழும்

தொகு

இரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாராய்ச்சி என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளில் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார். அதுக்கு இந்த ஃபாக்சு பீ2 உதவும் என்பது இவர் கணிப்பு.

மூலம்

தொகு
  • தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94

மேற்கோள்கள்

தொகு
  1. Wolfgang Enard1, Molly Przeworski1, Simon E. Fisher2, Cecilia S. L. Lai2, Victor Wiebe1, Takashi Kitano1, Anthony P. Monaco2 & Svante Pääbo1 (14 August 2002). "Molecular evolution of FOXP2, a gene involved in speech and language". Nature, International Weekly Journal of Science. Nature Publishing Group. pp. 418, 869–872. பார்க்கப்பட்ட நாள் 03 சூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. Cecilia S. L. Lai1,4, Simon E. Fisher1,4, Jane A. Hurst2, Faraneh Vargha-Khadem3 & Anthony P. Monaco1 (4 October 2001). "A forkhead-domain gene is mutated in a severe speech and language disorder". Nature, International Weekly Journal of Science. Nature Publishing Group. pp. 413, 519–523. பார்க்கப்பட்ட நாள் 03 சூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  3. Nature magazine, 14 - 9 -2002

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபாக்சு_பீ2&oldid=3739212" இலிருந்து மீள்விக்கப்பட்டது