ஃபிளை இன் ஆயின்மெண்ட்

ஆங்கிலத்தில் ஃபிளை இன் ஆயின்மெண்ட் (fly in the ointment) என்பது ஒரு மரபுத்தொடர் ஆகும். குறிப்பாக இந்த மரபுத் தொடரானது மகிழ்ச்சியான தருணத்தில் யாராவது எரிச்சல்படுத்துவது பற்றி குறிப்பிடுவது ஆகும். எ.கா.

We had a cookstove, beans, and plates; the fly in the ointment was the lack of a can opener.

இந்தச் சொற்றொடரின் ஆரம்பகாலப் பயன்பாடு விவிலியத்தில் பிரசங்கி 10:1-ம் வசனத்தில், தென்படுகிறது:[1]

Dead flies cause the ointment of the apothecary to send forth a stinking savour. (Ecclesiastes 10:1)

பழங் காலத்தில் மருத்துவர்கள் பெரிய பாத்திரம் அளவுக்கு மருத்துவக் களிம்புகளைச் சேமித்து வைத்திருப்பார்கள். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதிலிருந்து தேவையான அளவுக்குக் களிம்பை எடுத்துத் தருவார்கள். எத்தனையோ ஆயிரம் பேரைக் குணப்படுத்தும் களிம்பைக் கொண்ட அந்த பாத்திரத்தில் ஒரு சிறிய ஈ விழுந்துவிடும். அதனால், அந்த மொத்தக் களிம்புமே கெட்டுப் போய் பயனற்றதாகிவிடும். இவ்வாறு களிம்பில் ஈ விழுந்துவிடுவதிலிருந்து மேற்கண்ட சொற்றொடர் பிறந்தது.

ஆதாரங்கள்

தொகு
  • The Fly in the Ointment: 70 Fascinating Commentaries on the Science of Everyday Life by Joseph A. Schwarcz, Ecw Press, May 28, 2004.
  • 2107 Curious Word Origins, Sayings & Expressions from White Elephants to a Song and Dance by Charles Earle Funk (Galahad Book, New York, 1993
  • Encyclopedia of Word and Phrase Origins by Robert Hendrickson (Facts on File, New York, 1997).

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிளை_இன்_ஆயின்மெண்ட்&oldid=3725967" இலிருந்து மீள்விக்கப்பட்டது