அகமத் அத்லி
அகமத் அத்லி (Ahmed Adly) எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் பிறந்தார்.
அகமத் அத்லி Ahmed Adly | |
---|---|
நாடு | எகிப்து |
பிறப்பு | 19 பெப்ரவரி 1987 எகிப்து, கெய்ரோ |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் |
பிடே தரவுகோள் | 2596 (திசம்பர் 2021) (வரிசை எண். 256 சனவரி 2015 பிடே தரப்புள்ளிகள்) |
உச்சத் தரவுகோள் | 2640 (சனவரி 2011) |
2005 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க சதுரங்கச் சாம்பியன் பட்டத்தையும் 2007 ஆம் ஆண்டு உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் அகமத் அத்லி வென்றுள்ளார்[1]. ஐசுலாந்து நாட்டின் ரெய்க்யவிக் நகரத்தில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைவருக்குமான சதுரங்கப் போட்டியில், காப்ரியல் சர்கிசியன், சாக்ரியர் மேமிதையரோவ், இகோர்-அலெக்சாந்தர் நடாப், பென்டலா அரிகிருட்டிணன் ஆகியோருடன் ஒன்று முதல் ஐந்து வரையிலான இடங்களுக்கான போட்டியில் சமநிலை வகித்தார்[2]. இதேபோல 2008 ஆம் ஆண்டு ஆம்பர்க்கில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிகர்த்சு லங்கா, தோரியன் ரோகோசெங்கோ ஆகியோருடன் சேர்ந்து முதல் மூன்று இடங்களுக்கான போட்டியில் சமநிலை வகித்தார்[3]. 2009 இல் நடைபெற்ற உலோக கோப்பை சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட இவர் முதல் சுற்றில் உருசியாவைச் சேர்ந்த விக்டர் போலோகன்னிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்[4]
சாம்பியன் பட்டங்கள்
தொகு1.அர்மீனியாவில் நடைபெற்ற 2007 ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டம் 2.2004 ஆம் ஆண்டு கிரீசு நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Namibianchessfederation.com – Profile of GM Ahmed Adly". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
- ↑ "Reykjavík Open 2006". Chess-Results.com. 2006-03-20. பார்க்கப்பட்ட நாள் 7 May 2011.
- ↑ "Internationale Hamburger Meisterschaft". FIDE. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
- ↑ Crowther, Mark (2009-12-15). "The Week in Chess: FIDE World Cup Mini-Site 2009". Chess.co.uk. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.