அகவல் வெண்பா

வெண்பா வகையினைக் கூறும் யாப்பருங்கல விருத்தி செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா என்று வெண்பா மூன்று வகைப்படும் என்று கூறி விளக்கமும் எடுத்துக்காட்டும் தருகிறது. [1]

விளக்கம்

அகவல் வெண்பா என்பது இன்னிசை வெண்பா[2]

எடுத்துக்காட்டு

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாள்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

மேற்கோள்

தொகு
  1. யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - 179 & 180
  2. அகவல் வெண்பா அடிநிலை பெற்றுச்
    சீர்நிலை தோறும் தொடைநிலை திரியாது
    நடைவயின் ஓரடி
    நெய் ஆர்ந்து அன்ன நேயம் உடைத்தாகிப்
    பொருஉளொடு புணர்ந்த எழுத்து அழியாதே
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகவல்_வெண்பா&oldid=3451937" இலிருந்து மீள்விக்கப்பட்டது