அகாரிகசு

பூஞ்சை பேரினம்
(அகாரிகஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகாரிகசு
A. campestris
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Agaricus

L.:Fr. emend Karst.
மாதிரி இனம்
Agaricus campestris
L.:Fr.
Species
வேறு பெயர்கள் [1]
  • அமனிதா Dill. ex Boehm. (1760)
  • பூஞ்சைகள் Tourn. ex Adans. (1763)
  • கைப்போபைலம் Paulet (1808)
  • மையெசு Paulet (1808)
  • அகாரிகசு இனக்குழு. Psalliota Fr. (1821)
  • பிரதெல்லா (Pers.) Gray (1821)
  • சாலியோட்டா (Fr.) P.Kumm. (1871)

அகாரிகசு (Agaricus) எம்பது காளான்களின் பேரினமாகும். இதில் உண்ணத்தகும் காளாண்களும் நச்சுக் காளாண்கலும் அமைகின்றன. இதில் உலக முழுவதும் 300 இனங்கள் உள்ளன.[2][3] னைந்தப் பேரினத்தில் மேற்கத்திய நாடுகளில் பரவலாகப் பயிரிடப்படும் இயல்புப் பொத்தான் அல்லது குடைக் காளான் இனமான ( அகாரிகசு பைபோரசு) , வயற் காளானான ([ஆகாரிகசு கம்பெசுட்ரிசு|அ. கம்பெசுட்ரிசு]]) ஆகியனவும் அடங்கும்.

இப் பேரினத்தில் உள்ள இனங்கள் சதைப்பற்றுள்ள பொத்தான் அல்லது குடை வடிவக் கவிப்பு உச்சியில் அமையும். பொத்தான் அடியில் மெல்லிய ஆரத்தகடுகள் அல்லது விதைபைகள் வளரும். இபைகளில் விதைத்தூள்கள் உருவாகின்றன.லிந்த இனங்கள் அகாரிகேசியே குடும்பத்தின் பிஅ இனங்களில் இருந்து பழுப்புநிற விதைத்தூள்காளால் வேறுபடுகின்றன. அகாரிகசு இனங்களில் இக்குடைக்குக் கீழாக பூத்த தண்டு அவை அமைந்த பொருளில் அல்லது அடித்தளத்தில் இருந்து குடையை மேல்தூக்கிப் பிடிக்கிறது. இத்தண்டின் மேலமைந்த காப்புறை வளரும் விதைப்பைகளைக் காப்பாற்றி, பிறகு தண்டின் மேற்பகுதியில் வலயமாக மாறிவிடும்.

வகைபாட்டியல்

தொகு
 
கைப்போபைலம் பற்றிய 1855 ஆண்டுக் களக்குறிப்புகள்.( இணைபெயர்கள்): ஓம்பாலியா , அகாரிகசு (இணைக்கப்பட்ட கையால் எழுதிய குறிப்புகளுடன்).

பல ஆண்டுகளாகவே அகாரிகசு பேரினம் சாலியோட்டா எனப் பெயரிடப்பட்டிருந்தது. இன்னமும் கூட, காளாண்களைப் பற்றிய பழைய நூல்களில் இப்பெயரைக் காணலாம். அகாரிகசு பேரினத்தை சாலியோட்டா எனவோ சாலியோட்டா பேரினத்தை அகாரிகசு எனவோ பெயரிட பரிந்துரைக்கும் அனைத்து முன்மொழிதல்களுமே மேலோட்டமானவையே எனத் தற்போது கருதப்படுகிறது.[4]

அகாரிகசுவுக்குப் பல தோற்றங்கல் கூறப்படுகின்றன. அகாரி மக்களும் அகரசு ஆறும் அமைந்த சமார்ழ்சியா ஐரோப்பாவியாவில் அகாரிகசு தோன்றியிருக்கலாம் ( இவை அனைத்துமே உக்கிரைனின் பெர்தியான்சுக் அருகில் அமைந்த அசோவ் கடலின் வட கரையில் உள்ளன).[5][6][7] " மரப் பூஞ்சைவகை" எனப் பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான ἀγαρικόν என்பதையும் இங்குக் கருதிப் பார்க்கலாம்.

தோக் இலின்னேயசுவின் பெயரீடு மதிப்பிழந்துவிட்டது எனக் கூறுகிறார் ( எனவே, சரியான ஆசிரியர் சான்றுs "L. per Fr., 1821" என அமையவேண்டும். ஏனெனில், அகாரிகசு எனும் பெயரீடு தவுர்னேபோர்த்தின் பெயரீட்டுடன் இணைக்கப்படவில்லை. மேலும், இலின்னேயசு அகாரிகசு Dill., அமனிதா Dill. இரண்டையுமே இணைபெயராகக் கொள்கிறார். ஆனால், உண்மையில் அமனிதா Dill. க்கான பதிலீடு, A. quercinus, வகைமையே தவிர, A. campestris வகைமை ஆகாது. ஏலியாசு மாக்னசு பிரைசு அகாரிகசு பெயரை இலின்னேயசுவின் பொருளிலேயேகையாள்வதால் இந்த வினா மேலும் கூடுதல் வலுவடைகிறது ( இதனால், அமனிதா சிக்கல்களையும்), அ. கம்பெசுட்ரிசு சிக்கலையும் கார்சுட்டன் அகாரிகசு பெயரில் இருந்து தனிப்படுத்துகிறார். எனவே தான் அப்போது இலெபியோட்டா பற்றி தோக் எழுதும்போது, இங்கு வகைமைபேணல் என்பது ஒரு கட்டாயமாகிறது என வற்புறுத்துகிறார்.[8]

சாலியோட்டா பேரினத்தின் மாற்றுப்பெயர் வலயம் எனப் பொருள்படும் பண்டைய கிரேக்கச் சொல்லான psalion/ψάλιον, என்பதில் இருந்து பெறப்பட்டதாகும் எனச் சாலியோட்டா இனக்குழு பற்றி பிரைசு(1821) எழுதிய நூலில் முதலில் குறிப்பிட்டுள்ளார், இதன் வகைமை அகாரிகசு கம்பெசுட்ரிசு ஆகும். பரவலாக இது ஏற்கப்பட்டாலும், இயர்லே அ. கிரட்டெசியசு வை வகைமைப் பெயராக முன்மொழிகிறார். பவுல் கும்மர் தான் முதலில் சாலியோட்டா இனக்குழுவை பேரின மட்டத்துக்கு உயர்த்தினார். சாலியோட்டா முன்பு அகாரிகசுவை உள்ளடக்கியது. எனவே பிரிக்கப்பட்ட பிறகு எஞ்சிய பேரினத்தின் பெயரை மாற்றிப் பெயரிடவேண்டும். ஆனால் அப்படியான மாற்றம் ஏதும் நிகழவில்லை.[9]

தொகுதி மரபியல்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Synonymy: Agaricus L., Sp. pl. 2: 1171 (1753)". Index Fungorum. CAB International. பார்க்கப்பட்ட நாள் 2013-08-29.
  2. Bas C. (1991). A short introduction to the ecology, taxonomy and nomenclature of the genus Agaricus, 21–24. In L.J.L.D. Van Griensven (ed.), Genetics and breeding of Agaricus. Pudoc, Wageningen, The Netherlands.
  3. Capelli A. (1984). Agaricus. L.: Fr. (Psalliota Fr.). Liberia editrice Bella Giovanna, Saronno, Italy
  4. Wakesfield E. (1940). "Nomina genérica conservando. Contributions from the Nomenclature Committee of the British Mycological Society, III". Transactions of the British Mycological Society 24 (3–4): 282–293. doi:10.1016/s0007-1536(40)80028-4. 
  5. Rolfe R. T., Rolfe F. W. (1874). "The derivation of fungus names". The Romance of the Fungus World. Courier Corporation. pp. 292–293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486231051.
  6. R. Talbert, ed. (2000). "Map 84. Maeotis". Barrington Atlas of the Greek and Roman World. Princeton University Press.
  7. W. Smith, ed. (1854). "Agari". Dictionary of Greek and Roman Geography. Vol. Vol.I. Boston: Little, Brown, and Company. p. 72. {{cite book}}: |volume= has extra text (help) (on Google Books, on archive.org)
  8. Donk, M.A. (1962). "The generic names proposed for Agaricaceae". Beiheifte zur Nova Hedwigia 5: 1–320. பன்னாட்டுத் தர தொடர் எண்:0078-2238. 
  9. Donk, M.A. (1962). "The generic names proposed for Agaricaceae". Beiheifte zur Nova Hedwigia 5: 1–320. ISSN 0078-2238

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agaricus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாரிகசு&oldid=4115466" இலிருந்து மீள்விக்கப்பட்டது