அகிலா தனஞ்செய

மகாமாரக்கள குருகுலசூரியா படபெண்டிகே அகிலா தனஞ்சய பெரேரா (Mahamarakkala Kurukulasooriya Patabendige Akila Dananjaya Perera பிறப்பு: அக்டோபர் 4, 1993) அகில தனஞ்சயா என பரவலாக அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இருப்பினும், டிசம்பர் 2018 இல், அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச்சிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், அவரது பந்துவீச்சு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கருதப்பது. பின்னர் அது மார்ச் 2019 இல் சரி செய்யப்பட்டது.[1] செப்டம்பர் 2019 இல், சர்வதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) தனஞ்சயாவின் பந்துவீச்சு நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கருதப்பட்டதை அடுத்து, பன்னிரண்டு மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்தது.[2]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவர் மொரட்டுவாவைச் சேர்ந்த ஒரு தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தனஞ்சய, பனதுராவின் மொரட்டுவ மகா வித்யாலய பனாதுரா மகாநாம நவோத்யா வித்யாலயாவில் படித்தார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இலங்கை ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் தனது நீண்டகால தோழியான நெத்தலி டெக்ஷினியை 22 ஆகஸ்ட் 2017 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3][4] மொரட்டுவாவின் ரமாடியா ரன் மால் ஹாலிடே ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. மேலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கனா ஹெராத் மற்றும் அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டனர்.[5]

உள்நாட்டு போட்டிகள்தொகு

தொடக்க இலங்கை பிரீமியர் லீக்கில் வயம்பா யுனைடெட் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். நாகேந்திரன் ஆகாஷ் அணிக்கு எதிரான தன்னுடைய இரண்டாவது போட்டியில் அவர் 18 ஓட்டங்களைை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளை கைப்பற்றினார். மட்டையாளர்கள் இவரின் பந்துவீச்சில் ஓட்டங்களை எடுக்க சிரமப்பட்டனர்.[6]

2013 ஐபிஎல் ஏலத்தில், தனஞ்சயா தனது அடிப்படை விலையான $ 20,000 க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் நடந்த இந்தியன் பிரீமியர் தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானார்.[7][8]

மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டிகளுக்கான காலியின் அணியில் இடம் பெற்றார் . ஆகஸ்ட் 2018 இல், அவர் கொழும்பின் அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இடம் பெற்றார் . மார்ச் 2019 இல், அவர் 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9]

சர்வதேச வாழ்க்கைதொகு

துவக்க காலம்தொகு

வலைப் பயிற்சியின்போது இவரின் சிறப்பான பந்து வீச்சினால் கவரப்பட்ட மஹேல ஜெயவர்தன இவரை தேசிய அணியில் இடம் பெறச் செய்தார் ஆனால் அதற்கு முன்பாக இவர் எந்த ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பட்டியல் போட்டிகளிலும் இருபது-20 போட்டிகளிலும் விளையாடவில்லை இதனால் இவரின் தேர்வு சர்ச்சைக்குள்ளானது.[10]

இது 2012 ஐசிசி உலக இருபதுக்கு -20 இறுதி அணியில் இடம் பெற வழிவகுத்தது.[11] உலக இருபதுக்கு 20 போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக பல்லேகேலில் தனது 18 வயதில் அறிமுகமானார்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலா_தனஞ்செய&oldid=2867793" இருந்து மீள்விக்கப்பட்டது