அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா வாரியம்

அகில் பாரதிய கந்தர்வ மகாவித்யாலய வாரியம் (Akhil Bharatiya Gandharva Mahavidyalaya Mandal) என்பது இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதன் நிர்வாக அலுவலகங்கள் மீரஜ்ஜிலும், அதன் முக்கிய இசைப்பள்ளி அல்லது இசை வித்யாலயா [[நவி மும்பையின் வாசி நகரிலும் உள்ளன. [1] நிறுவனம் குரல் இசையில் பயிற்சியையும், சான்றிதழையும் வழங்குகிறது. மேலும், சித்தார் போன்ற மெல்லிசைக் கருவிகளிலும், கைம்முரசு இணை போன்ற தாள வாத்தியங்கள் உள்ளிட்ட கருவியிசை, ஒடிசி, பரதநாட்டியம், கதக் போன்ற பல்வேறு பாரம்பரிய நடன வடிவங்களிலும் பயிற்சியினை வழங்கி வருகிறது.

பிரராம்பிக் (தொடக்க நிலை) முதல் சங்கீதாச்சார்யா (முனைவர் பட்டத்திற்கு சமமான நிலை) வரையிலான நிலைகளுக்கு நிறுவனம் இந்த நிகழ்த்து கலைகளில் படிப்புகளை வகுத்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பிற இடங்களில் சுமார் 1,200 இணைந்த நிறுவனங்கள் நிறுவனத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. நிறுவனம இந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை, ஏப்ரல் / மே மற்றும் நவம்பர் / திசம்பர் மாதங்களில் உலகம் முழுவதும் 800 மையங்களில் தேர்வுகளை நடத்துகிறது.

வரலாறு தொகு

விஷ்ணு திகம்பர் பலூசுகர் அமைத்த அஸ்திவாரங்களில் அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா கட்டப்பட்டுள்ளது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடையே இசைக் கல்வியை சனநாயகமயமாக்குவதற்கும், பரப்புவதற்கும் விஷ்ணு நாராயண் பட்கண்டே பொறுப்பேற்றார். [2] மே 5, 1901 இல், பலூசுகர் லாகூரில் கந்தர்வ வித்யாலயா என்ற இசைப் பள்ளியை அமைத்தார். இறுதியில், அவர் பள்ளியை மும்பைக்கு மாற்றினார், 1915 இல், பள்ளிக்கு ஒரு புதிய கட்டிடத்தைத் தொடங்கினார். இருப்பினும், நிதி மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் 1924 இல் பள்ளி மூடப்படுவதற்கு வழிவகுத்தது.

1931 இல் பலூசுகர் இறந்த பிறகு, அவரது மாணவர்கள் அவரது கல்விப் பணிகளைத் தொடர முடிவு செய்தனர். அவரது மரணத்திற்குப் பிறகு, சங்கர்ராவ் வியாஸ் மற்றும் என்.எம். கரே ஆகியோர் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தை கூட்டினர். இந்த கூட்டத்தில், இந்த கல்வி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் ஒரு வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அகில பாரதிய காந்தர்வ மகாவித்யாலயா வாரியம் நிறுவப்பட்டது. [3] பலூசுகரின் மாணவர்கள் இந்தியா முழுவதும் இசைப் பள்ளிகளை அமைத்தனர். உதாரணமாக, வினய் சந்திர மௌத்கல்யா 1939 இல் தில்லியில் ஒரு கந்தர்வ மகாவித்யாலயாவை அமைத்தார். இந்த பள்ளிகள் அகில பாரதிய காந்தர்வ மகாவித்யாலயா வாரியம் பரிந்துரைத்த பாடத்திட்டங்களைப் பின்பற்றின. மேலும் அந்த வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்ட்னர். பல ஆண்டுகளாக, இணைந்த பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இன்று, ஒவ்வொரு ஆண்டும் வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு சுமார் 100,000 மாணவர்கள் வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க பழைய மாணவர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Akhil Bharatiya Gandharva Mahavidyalaya Mandal". பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
  2. Bakhle, Janaki (2005). Two Men and Music. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195166118. https://archive.org/details/twomenmusicnatio0000bakh. 
  3. "About Us". பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.