கந்தர்வ மகாவித்யாலயா, புது தில்லி
கந்தர்வ மகாவித்யாலயா (Gandharva Mahavidyalaya) என்பது இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவற்றை பிரபலப்படுத்த 1939 இல் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்துஸ்தானி இசைக்கு புத்துயிர் அளித்த பண்டிட் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் நினைவை நிலைநிறுத்துவதற்கும், அவர் வகுத்த கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் மகாவித்யாலயா (பள்ளி) உருவானது . முதல் கந்தர்வ மகாவித்யாலாயா 1901 மே 5 அன்று லாகூரில் நிறுவப்பட்டது. அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா வாரியம் அமைத்த பாடத்திட்டத்தை புதுடெல்லி பள்ளி பின்பற்றுகிறது.
வரலாறு
தொகுபுது தில்லி, கந்தர்வ மகாவித்யாலயா 1939 ஆம் ஆண்டில் குவாலியர் கரானாவின் நிபுணரான பண்டிட் விநாயக்ராவ் பட்வர்தனின் சீடரான பண்டிட் வினய் சந்திர மௌத்கல்யாவால் நிறுவப்பட்டது. இன்று இது தில்லியில் உள்ள மிகப் பழமையான இசைப் பள்ளியாகும். இது அவரது மகனும் பிரபல இந்துஸ்தானி பாடகருமான பண்டிட் மதுப் முட்கல் தலைமையில் நடந்து வருகிறது.
படிப்புகள்
தொகுநிறுவனம் இசை மற்றும் நடனம் தொடர்பான பின்வரும் கிளைகளில் தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சி அளிக்கிறது -
(1) இந்துஸ்தானி இசை: குரல்
(2) இந்துஸ்தானி இசை கருவி: சித்தார், பன்சுரி (தற்போதைய மூங்கில் புல்லாங்குழல்), கைம்முரசு இணை, ஆர்மோனியம் மற்றும் வயலின்
(3) இந்திய செம்மொழி நடனம்: கதக், பரதநாட்டியம் மற்றும் ஒடிசி
இங்கு நடத்தப்பட்டு வரும் படிப்புகள் அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டவை . இது இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1200 இணைந்த நிறுவனங்களையும் 800 தேர்வு மையங்களையும் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியது.
கிளைகள்
தொகுஇது, குவாலியர் கரானாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ பண்டிட் வினய் சந்திர முத்கல், அவரது தம்பி பண்டிட். விபின்சந்திர முத்கல் ஆகியோரால் அகில பாரதிய காந்தர்வ மகாவித்யாலயா வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள அவர்களின் தம்பி எஸ். பிரமோத் முத்கலின் ஆலோசனையின் கீழ் 1939இல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் புதுதில்லியில் உள்ள கன்னாட்டு பிளேசில் நிறுவப்பட்டது. மேலும் தில்லி பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கமலா நகரில் பழைய தில்லியில் கிளைத்தது. இதற்கு பண்டிட் விபின் சந்திர மௌத்கல்யா தலைமை தாங்கினார். மேலும், 2003 வரை கந்தர்வ மகாவித்யாலயாவின் தில்லி கிளையாக செயல்பட்டு வந்தார். 1972ஆம் ஆண்டில் தீன் தயாள் உபாத்யாய மார்க்கில் புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. இப்போது 1995 முதல் அது பண்டிட் வினய் சந்திர முத்கல்லின் மகன் பண்டிட். மதுப் முத்கல் தலைமையில் இயங்கி வருகிறது. இதில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 60 ஆசிரியர்கள் உள்ளனர். கமலா நகர் கிளை இப்போது அகில பாரதிய காந்தர்வ மகாவித்யாலயா வாரியத்துடன் இணைந்த 'சதுரங் சங்க சன்ஸ்தான்' என்ற சுயாதீன நிறுவனமாக அனுபம் முத்கல் மற்றும் திருமதி. இந்து முத்கல் ஆகியோரின் கீழ் இயங்குகிறது. தில்லியில் பல ஆண்டுகளாக கந்தர்வ மகாவித்யாலயா வருடாந்திர "விஷ்ணு திகம்பர் விழாவை" ஏற்பாடு செய்து வருகிறது.[1] தில்லியில் வேறு எங்கும் கந்தர்வ மகாவித்யாலயாவின் கிளை இல்லை. மீரஜ்ஜின் அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா வாரியத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
மகாவித்யாலயா இந்தியாவின் சிறந்த தரவரிசை மற்றும் மூத்த இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு இசை ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்படுகிறது.