மதுப் முத்கல்

இந்திய இசை கலைஞர்

மதுப் முத்கல் (Madhup Mudgal) இந்திய இந்துஸ்தானி இசை பாடகரான இவர்,[2] கயல் மற்றும் பஜனைகளுக்கு பெயர் பெற்றவர். குமார் கந்தர்வனின் சீடரான இவர், இசையமைப்பாளராகவும், இசை நடத்துனராகவும், இசை மற்றும் நடனப் பள்ளியான தில்லி கந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராகவும் 1995 முதல் இருந்து வருகிறார்.[3][4]

மதுப் முத்கல்
பிறப்பிடம்புது தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்கயல், பஜனைகள்
தொழில்(கள்)இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகர், இசையமைப்பாளர், இசை நடத்துனர், இசை மற்றும் நடனப் பள்ளியான தில்லி கந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வர் [1]
இசைக்கருவி(கள்)இந்தியப் பாரம்பரிய குரலிசைக் கலைஞர்
மார்ச் 29, 2006 அன்று புதுதில்லியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மதுப் முத்கலுக்கு பத்மசிறீ விருதினை வழங்கினார்.

இவர் 2006 ல் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க பத்மசிறீ விருதைப்]] பெற்றுள்ளார்.[5]

ஆரம்பகால வாழ்க்கையும், பயிற்சியும்

தொகு

குவாலியர் கரானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர் பேராசிரியர் வினய் சந்திர முத்கல் என்பவருக்கு இவர் புதுதில்லியில் பிறந்தார். இவரது தந்தை 1939 ஆம் ஆண்டில் புது தில்லியின் கந்தர்வ மகாவித்யாலயாவை கன்னாட் பிளேசில் தொடங்கினார். சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற விஜயா முலே எழுதிய ஏக் அனெக் அவுர் ஏக்தா என்ற இயங்குபடத்தில் ஹிந்த் தேஷ் கே நிவாசி என்ற பாடல்களுக்கு சிறந்த முறையில் இவரது தந்தை நினைவுகூரப்படுகிறார்.[6] தனது தந்தையின் ஆர்வத்தின் காரணமாக, மதுப் ஒரு இசை சூழலில் வளர்ந்தார். அங்கு பண்டிட் ஓம்கார்நாத் தாக்கூர், அலி அக்பர் கான் போன்ற மூத்த இசைக்கலைஞர்கள் இசை அமர்வுகளுக்கு தவறாமல் வருவார்கள். இந்த பள்ளி 1972 ஆம் ஆண்டில் தீன தயாள் உபாத்யாய் சாலையில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இன்று 1200க்கும் மேற்பட்ட நடன மற்றும் இசை மாணவர்கள் மற்றும் 60 ஆசிரியர்களைகளும் உள்ளனர்.[7] புது தில்லி, மாடர்ன் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை நிறைவு செய்த இவர்,[8] பின்னர், தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து இசையில் முதுகலையையும், கயலில் ஆராய்ச்சிக்காக முதுதத்துவமாணியையும் பெற்றார். இந்துஸ்தானி இசையில் தனது ஆரம்பகால பயிற்சியை தனது தந்தையிடமிருந்து பெற்றார். மேலும் பண்டிட் வசந்த் தாக்கர், பண்டிட் ஜஸ்ராஜ், இறுதியாக இசைக்கலைஞர் குமார் கந்தர்வன் போன்ற இசைக்கலைஞர்களின் கீழும் கற்றுக் கொண்டார்.

தொழில்

தொகு

இவர், தனது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்கிறார். இவர் பல ஆண்டுகளாக கந்தர்வ இசைக்குழுவின் நடத்துனராக இருந்து வருகிறார். தில்லியின் பழமையான இசைப் பள்ளியான காந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராக 1995 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் பல இசைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.[3]

இவர் தனது சகோதரி ஒடிசி நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான மாதவி முத்கலின் தயாரிப்புகளுக்கு இசையமைக்கிறார்.[9][10]

சொந்த வாழ்க்கை

தொகு

இவரது சகோதரி மாதவி முத்கல்யும், கந்தர்வ மகாவித்யாலயத்தில் கற்பிக்கிறார். இவரது மகள் அருசி, தில்லியில் உள்ள கார்மல் கான்வென்ட் பள்ளியின் முன்னாள் மாணவரும், கந்தர்வ மகாவித்யாலயாவின் மாதவியால் பயிற்சியளிக்கப்பட்டவருமாவார். இவர் 2003 ஆம் ஆண்டில் ஒரு தனி ஒடிசி நடனக் கலைஞராக அறிமுகமானார். 2008ஆம் ஆண்டில், ஜெர்மனி நடன இயக்குநர் பினா பாசு ஏற்பாடு செய்த சர்வதேச நடன விழாவில் பங்கேற்ற ஒரே இந்திய நடனக் கலைஞர் ஆவார். அங்கு பாகேசிறீ என்ற நடனத்தின் ஒரு சிறுபகுதியை நிகழ்த்தினார்.[11] இவரது சகோதரர் முகுல் முத்கல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியாவார்.[12][13]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The modern raga". Indian Today. 24 September 2007.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Tripathi, Shailaja (26 November 2010). "With more edge". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021123342/http://www.thehindu.com/arts/history-and-culture/article915356.ece. 
  3. 3.0 3.1 "Madhup Mudgal and the world of khayal". Indian Express. 8 January 2006. http://cities.expressindia.com/fullstory.php?newsid=164589. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Interview : Madhup Mudgal: 'It's hard teaching beginners'". The Financial Express. 12 November 2006. http://www.financialexpress.com/news/its-hard-teaching-beginners/183636/. 
  5. "Padma Awards". Ministry of Communications and Information Technology.
  6. "National Award for Best Educational/Motivational/Instructional Film".
  7. "A taste for quality: Madhup Mudgal provides some food for thought.." இம் மூலத்தில் இருந்து 2011-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110521091705/http://www.hindu.com/mp/2006/01/12/stories/2006011201150400.htm. 
  8. Madhup Mudgal
  9. Srikanth, Rupa (29 January 2010). "Sophisticated choreography". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021151250/http://www.thehindu.com/arts/dance/article91212.ece. 
  10. Itzkoff, Dave (26 July 2010). "Cunningham's 'Xover' Will Open Fall For Dance Festival". New York Times. https://www.nytimes.com/2010/07/27/arts/dance/27arts-CUNNINGHAMSX_BRF.html. 
  11. "Dance Works". http://www.indianexpress.com/news/dance-works/380586/. 
  12. Jasvinder Sidhu (7 October 2014). "Spot fixing: Mudgal panel examines three Indian players – Hindustan Times". Archived from the original on 26 October 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  13. "Supreme Court asks Mudgal committee to complete probe within two months". The Indian Express. 1 September 2014. p. 2. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுப்_முத்கல்&oldid=4162337" இலிருந்து மீள்விக்கப்பட்டது