விநாயக்ராவ் பட்வர்தன்

பண்டிட் விநாயக் நாராயண் பட்வர்தன் (Vinayakrao Patwardhan) (22 சூலை 1898 - 23 ஆகத்து 1975) இவர் இந்துஸ்தானி இசையின் குவாலியர் கரானாவின் (பாடும் பாணி) இந்தியப் பாடகர் ஆவார். [1]

வினாயக்ராவ் பட்வர்தன்
பிறப்பு22 சூலை 1898
மீரஜ், இந்தியா
இறப்பு23 ஆகத்து 1975(1975-08-23) (அகவை 77)
புனே, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பண்டிட் விநாயக் நாராயண் பட்வர்தன்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

விநாயக்ராவின் மாமா கேசவ ராவ் கோரட்கர் இவருக்கு முதல் இசை ஆசிரியராக இருந்தார். இவர், 1907 ஆம் ஆண்டில், இலாகூரில் உள்ள கந்தர்வ மகாவித்யாலயாவுக்குச் சென்றார். அங்கு இவருக்கு விஷ்ணு திகம்பர் பலூசுகர் கற்பித்தார்.

தொழில் தொகு

இவர், மும்பை, நாக்பூர், இலாகூர் உள்ளிட்ட கந்தர்வ மகாவித்யாலாவின் பல்வேறு கிளைகளில் கற்பித்தல் பணிகளை செய்து வந்தார். இவரது குரல் மக்களிடையே பிரபலமாக இருந்தது. குறிப்பாக நடிகர் / பாடகர் பால கந்தர்வனின் கவனத்தை ஈர்த்தது. ஒரு சந்தர்ப்பத்தில், குவாலியரின் மூத்தக் கலைஞர் கிருட்டிண புவா வாழே புனே பாடகர்களுக்கு ஒரு சவாலை வழங்கினார். இவர், இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, வாழேவிடம் இருந்து சிக்கலான இராகங்களைக் கற்றுக்கொண்டார்.

1940களின் பிற்பகுதியில், பீம்சென் ஜோஷி ஒரு ஆசிரியரைத் தேடியபோது, ஜலந்தரில் இவரை சந்தித்தார். இவர், சவாய் கந்தர்வனிடம் கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர், மராத்தி இசைக்கலைஞர்களுடன் பணியாற்றினார். பின்னர், கந்தர்வ மகாவித்யாலயாவின் சொந்த கிளையை நிறுவினார்.

இவர், தனது குருவின் மகன் த. வி. பலூசுகர், சுனந்தா பட்நாயக் உட்பட நன்கு அறியப்பட்ட சீடர்களுக்கு பயிற்சி அளித்தார்.

அங்கீகாரம் தொகு

1972இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்கு பத்ம பூசண் வழங்கினார். [2] சோவியத் ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுக்கும் இந்திய கலாச்சாரக் குழுவை வழிநடத்தினார்.

குறிப்புகள் தொகு

  1. "Vinayakrao Patwardhan". homes.cs.washington.edu. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயக்ராவ்_பட்வர்தன்&oldid=3571668" இலிருந்து மீள்விக்கப்பட்டது