சவாய் கந்தர்வன்

இராமச்சந்திர குண்ட்கோல்கர் சௌன்சி, (19 சனவரி 1886 - 12 செப்டம்பர் 1952) பிரபலமாக பண்டிட் சவாய் கந்தர்வன் என்று அறியப்படும் இவர் [1] கருநாடகாவைச் சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகராவார் கிராணா கரானா பாணியில் இவர் மேதையாக இருந்தர். இவர் உஸ்தாத் அப்துல் கரீம் கானின் முதல் மற்றும் முன்னணி சீடராகவும், பாரத ரத்னா பரிசு பெற்ற பண்டிட் பீம்சென் ஜோஷியின் குருவாகவும் இருந்தார் . கிரந்தர் கரணாவின் பாணியை தனது திறமையான சீடர்களான பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், பைரோசு தஸ்தூர், மற்றும் பண்டிட். பசவராஜ் ராஜ்குரு ஆகியோரைக் கொண்டு பிரபலபடுத்தினார். [2]

சவாய் கந்தர்வன்
Sawai Gandharva.jpg
சவாய் கந்தர்வன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்இராமசந்திர குந்தோல்கர் சௌன்சி
இயற்பெயர்இராமசந்திர குந்தோல்கர் சௌன்சி
பிறப்புசனவரி 19, 1886(1886-01-19)
பிறப்பிடம்குந்தோல், கருநாடகம்
இறப்பு12 செப்டம்பர் 1952(1952-09-12) (அகவை 66)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, கியால், தும்ரி, பஜனை, நாட்டிய கீதம், போன்றவை.
தொழில்(கள்)இந்துஸ்தானி இசைப் பாடகர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

இவர்,பிராமணக்குடும்பத்தில் 1836 சனவரி 19 அன்று கர்நாடகாவின் தார்வாட்டில் இருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள குந்தோலில் பிறந்தார். இவர் இராம்பாபு என்று அறியப்பட்டார். [3] இவரது தந்தை கணேஷ் சௌன்சி, உள்ளூர் நில உரிமையாளரும், நடிகருமான இரங்கன்னாகவுடா என்பவரிடம் எழுத்தராக இருந்தார். ஆரம்பத்தில், இவர் கல்வி மேல் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இவர் கவிதைகளை "இனிமையாக" பாடினார் என்பதால் தனது ஆசிரியர்களால் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேற்றப்பட்டார். பின்னர், ஹூப்ளியிலுள்ள இலாமிங்டன் உயர்நிலை பள்ளியில் அனுமதிக்கப்பட்டார் .இவரது தந்தைக்கு தனது மகனின் கல்விக்கு நிதியளிப்பது கடினமாக இருந்தது. எனவே இறுதியில் இவரது பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.

இசையில் துவக்கம்தொகு

இவரது கல்வியை நிறுத்திய பின்னர், இவரது தந்தை குந்தோலில் பல்வந்த்ராவ் கோல்கத்கர் என்ற இசை ஆசிரியரின் கீழ் பயிற்சி அளித்தார். அவரிடமிருந்து இவர், 75 துருபாத் இசைப்பாடல்களும், 25 தரனா இசைப்பாடல்களும், நூறு பிற பாடல்களும் ஒரு சில தாளங்களிலும் தேர்ச்சி பெற்றார். கோல்கட்கர் 1898 இல் இறந்தார். இவரது பயிற்சி வழிகாட்டுதல் இல்லாததால் முழுமையற்றதானது.

உஸ்தாத் அப்துல் கரீம் கான்தொகு

உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் ஹூப்ளிக்கு பயணம் செய்யும்போது இவர் ஹூப்ளியில் நடக்கும் தினசரி கலாச்சார நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்றார். அங்கு இவர் நாடகங்களைப் பார்ப்பதற்கும் இசையினைக் கேட்பதற்கும் நேரம் செலவிட்டார். ஒருமுறை, இவர் ஒரு உஸ்தாத் அப்துல் கரீம் கான் பாடுவதைக் கேட்டு, உடனடியாக வசீகரிக்கப்பட்டார். அப்போதிருந்து, உஸ்தாத்தின் உதவியை விரும்பினார். கிரானா கரானாவின் நிறுவனர் உஸ்தாத் அப்துல் கரீம் கான் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காலம் அது. இவர் பெரும்பாலும் நடிகர்களுடன் பல நாட்கள் தங்கியிருப்பார். அப்துல் கரீம் கான் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது இவரது தந்தை பணியாற்றும் வீட்டில் தங்கத் தொடங்கினார். அத்தகைய ஒரு பயணத்தில் இவருக்கு அவரிடம் பயிற்சி மேற்கொள்ளும் ஒரு வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. அப்துல் கரீம் கான் தன்னிடம் குறைந்தது எட்டு வருடங்களாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என இவரைக் கேட்டுக்கொண்டார்.

தொழில்தொகு

தனது ஆசிரியரின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு நாடக நிறுவனத்தில் சேர்ந்து மராத்தி நாடகங்களில் பாடகராக பிரபலமடைந்தார். இவர், மராத்தி நாடகங்களில் மேதையான பால கந்தர்வனுக்கு அடுத்து பெண்வேடங்களில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். [4] [5] இவர் கோவிந்த்ராவ் தெம்பேவின் சிவ்ராஜ் நாடக மண்டலியில் சில காலம் பணியாற்றினார். அங்கு பெண் வேடங்களில் நடித்தார்.

இறப்புதொகு

1942 ஆம் ஆண்டில், தனது 56 வயதில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இவரது கச்சேரி வாழ்க்கை திடீரென முடிந்தது. ஆனால் இவர் 1952இல் தான் இறக்கும் வரை தொடர்ந்து கற்பித்தார். [4]

சீடர்கள்தொகு

இவர் நன்கு அறியப்பட்ட பாரம்பரிய பாடகர் என்றாலும், கங்குபாய் ஹங்கல், பீம்சென் ஜோஷி, பசவராஜ் ராஜ்குரு மற்றும் பைரோசு தஸ்தூர் போன்ற பாடகர்களுக்கு இவர் பயிற்சி அளித்தார். குழந்தை பாடகர்-நடிகராக நாட்டியகலா பிரவர்தக் இசை நாடக நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருட்டிணாராவ் புலாம்ப்ரிகர், இவரிடமிருந்து இசை நாடகத்தை நோக்கமாகக் கொண்ட பாரம்பரிய இசையைக் கற்றுக் கொண்டார். [4]

சவாய் கந்தர்வ விழாதொகு

இவரது சீடர் பீம்சன் ஜோஷி, இவரது நினைவாக புனேவில் சவாய் கந்தர்வன் இசை விழாவைத் தொடங்கினார். [6] இந்த விழா முதல் இரண்டு தசாப்தங்களாக ஒரு சாதாரண அளவில் நடைபெற்றது. ஆனால் இது 1970கள் மற்றும் 1980களில் பிரபலமானது.

குறிப்புகள்தொகு

  1. Artist of the month
  2. Pandit Bhimsen Joshi - Pandit Bhimsen Joshi Classical Singer - Pandit Bhimsen Joshi Khayal Singer
  3. "Sawai Gandharv". தார்வாட் மாவட்டம் website. மூல முகவரியிலிருந்து 5 May 2012 அன்று பரணிடப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "Tribute to a Maestro: Sawai Gandharva". ITC Sangeet Research Academy.
  5. Two Men and Music: Nationalism in the Making of an Indian Classical Tradition by J. Bakhle; Oxford University Press, USA (2005), ISBN 978-0-19-516610-1
  6. "About Festival". Sawai Gandharva Music Festival website.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாய்_கந்தர்வன்&oldid=3081391" இருந்து மீள்விக்கப்பட்டது