பால கந்தர்வன்
பால காந்தர்வன் என்று பிரபலமாக அறியப்பட்ட நாராயண் சிறீபாத் ராஜன்சு (26 சூன் 1888 - 15 சூலை 1967) ஒரு பிரபல மராத்தி பாடகரும், மேடை நடிகருமாவார். மராத்தி நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களில் நடித்ததற்காக இவர் அறியப்பட்டார். ஏனெனில் இவரது காலத்தில் பெண்கள் மேடையில் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. [1] [2]
பால கந்தர்வன் | |
---|---|
பெண் வேடத்தில் பால கந்தர்வன் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | நாராயண் சிறீபாத் ராஜன்சு |
பிறப்பு | பலசு, நாக்தேன் வட்டம், சாங்லி மாவட்டம், மகாராட்டிரா Maharashtra, India | 26 சூன் 1888
இறப்பு | 15 சூலை 1967 புனே | (அகவை 79)
இசை வடிவங்கள் | சங்கீத நாடகம் |
தொழில்(கள்) | பாடகர், நாடக நடிகர் |
இசைத்துறையில் | 1905–1955 |
புனேவில் ஒரு பாடல் நிகழ்ச்சியின் பின்னர் இவருக்கு இந்த பெயர் வந்தது. ஒரு சமூக சீர்திருத்தவாதியும், இந்திய விடுதலை இயக்கத்தின் சுதந்திர போராட்ட வீரருமான பால கங்காதர் திலகர் இவரது நடிப்பைக் கண்டு "பால கந்தர்வன்" (இளம் கந்தர்வன்) என்றப் பெயரை அளித்தார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநாராயண் சிறீபாத் ராஜன்சு ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் சிரீபாத் ராஜன்சு என்பவருக்கும் அவரது மனைவி அன்னபூர்ணாபாய் என்பவருக்கும் மகனாக [4] இப்போதைய மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டத்தின் பலசு வட்டத்திலுள்ள நாக்தேன் என்ற கிராமத்தில் பிறந்தார்.
திருமணம்
தொகுஇவர், இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். மிகச் சிறிய வயதில், இவர் தனது சொந்த தேசஸ்த் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த இலட்சுமிபாய் என்பவரை மணந்தார். வழக்கமான இந்த திருமணம், முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக 1940 இல் இலட்சுமிபாய் இறக்கும் வரை நீடித்தது. இதற்கிடையில் பதினொறு ஆண்டுகள் கழித்து 1951 ஆம் ஆண்டில், பிரபல இந்திய நடிகையான அமிர்பாய் கர்நாடகியின் சகோதரி கோகர்பாய் கர்நாடகி என்பவரை மணந்தார். ஒரு முஸ்லிமான இவர் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாடும் திறனுடன் ஒரு மேடை நடிகையாக தனக்காக ஒரு தொழிலை மேற்கொண்டார். மேலும் நாராயணராவுடன் நாடக தயாரிப்புகளில் பணியாற்றினார். இவர்களது திருமணத்தை நாராயணராவ் குடும்பத்தைச் சேர்ந்த எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருமணமும் குழந்தையற்றதாகவே இருந்தது. பால காந்தர்வனின் இறப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோகர்பாய் 1964 இல் இறந்தார். [5]
நாடக வாழ்க்கை
தொகுநாராயண் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே பஜனைகளை பாட ஆரம்பித்தார். கோலாப்பூரைச் சேர்ந்த சாகு மகாராஜ் இவரது செவித்திறன் குறைபாட்டிற்கு மருத்துவ உதவிகளை வழங்கினார். மேலும், அந்தக் காலத்தின் முதன்மையான மராத்திய இசை நாடக நிறுவனமான கிர்லோஸ்கர் மண்டலிக்கு அறிமுகப்படுத்தினார். [6]
1905 இல் கிர்லோஸ்கர் நாடக மண்டலியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [3] இந்நிறுவனத்தை முஜும்தார் மற்றும் நானாசாகேப் ஜோக்லேகர் ஆகியோர் நடத்தி வந்தனர். 1911 இல் ஜோக்லேகர் இறந்த பிறகு, முஜும்தாரின் சர்வாதிகாரப் போக்கு குறித்து இவருக்கு அதிருப்தி இருந்தது. [7] இவரும் கணேஷ் கோவிந்த் ('கண்பத்ராவ்') போடாசு மற்றும் கோவிந்த்ராவ் தெம்பே ஆகியோர் 1913 ஆம் ஆண்டில் நிறுவனத்தை விட்டு வெளியேறி கந்தர்வ சங்க மண்டலத்தை உருவாக்கினர். [8] ஆனால், நாடக நிறுவனம் 1921இல் கடனில் மூழ்கியது. [9] பின்னர், இக்கடன் ஏழு ஆண்டுகளில் செலுத்தப்பட்டது. இருப்பினும், அடுத்த 6-7 ஆண்டுகளில் மீண்டும் கடன் அதிகமானபோது நிறுவனத்தை கலைத்தார். [10] பின்னர் பிரபாத் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஆறு படங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருப்பினும், தர்மாத்மா (1935) என்ற ஒரு படத்திற்குப் பிறகு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. ஏகநாதர் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தது இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. [11]
1937 இல் இவர், தனது நாடக நிறுவனத்தை மீண்டும் புதுப்பித்தார். அப்போது பெண் வேடங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நிறுவனம் பெண் வேடங்களில் நடிக்க ஒரு நடிகையைத் தேடியது. ஏப்ரல் 1938 இல் கோகர் கர்நாடகி என்பவரைக் கண்டறிந்தது. இவர், அவருடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர், இருவருக்கமான திருமணத்தில் முடிந்தது [12] கந்தர்வ சங்க மண்டலத்தில் கோகரின் நுழைவு இவரது குடும்பத்தில் பலத்த எதிர்ப்புக்காளனது. [13]
இவர், 25 பாரம்பரிய மராத்திய நாடகங்களில் நடித்தார். மேலும், சங்கீத நாடகங்கள் பொது மக்களிடையே பிரபலமடைவதில் பெரும் பங்கு வகித்தார். அவர் பாஸ்கர்புவா பக்கலேவின் சீடராக இருந்தார் . [14] பக்கலே இவரது 'சுயம்வர்' என்ற நாடகத்திற்கு இசை அமைத்தார். 'மானப்மான்' என்ற நாடகத்திற்கு கோவிந்திராவ் தெம்பே இசை அமைத்திருந்தார். [15] பிற்காலத்தில், இசையமைப்பாளர் கிருட்டிணா புலாம்ப்ரிகர் என்பவர் இவரது நாடகங்களுக்கு இசையமைப்பாளாராக இருந்தார். [16]
இறப்பு
தொகுபால கந்தர்வன் 1967 இல் இறந்தார்.
மரியாதை
தொகு- இவரது நினைவாக புனே நகரில் உள்ள ஒரு நாடக அரங்கத்திற்கு பால கந்தர்வ ரங்க மந்திர் என இவரது பெயரிடப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் புனேவைச் சேர்ந்த பிரபல மராத்தி எழுத்தாளரும், இவரது ரசிகருமான புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே என்பவரின் முயற்சியால் இது அமைக்கப்பட்டது. இதை ஆச்சார்யா பிரகலாத் கேசவ் ஆத்ரே திறந்து வைத்தார். இந்த நாடக அரங்கின் அடித்தளம் இவர் உயிருடன் இருந்தபோதே சொந்த கைகளால் தொடங்கப்பட்டது.
- இவரது வாழ்க்கை பயணத்தை சித்தரிக்கும் பாலகந்தர்வா என்றத் திரைப்படம் சந்திரகாந்த் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 2011 மே மாதம் வெளியிடப்பட்டது.
விருதுகள்
தொகு- 1955 ஆம் ஆண்டில், இவர் "குடியரசுத் தலைவர் விருது" பெற்றார். இது இப்போது சங்கீத நாடக அகாடமி விருது என்று அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து பெரும் மிக உயர்ந்த இசை கௌரவமாகும்.
- 1964 ஆம் ஆண்டில், இவர், இந்திய குடியரசின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன்களுகான விருதான பத்ம பூசண் விருதைப் பெற்றார். [17]
மேலும் காண்க
தொகுநூல்பட்டியல்
தொகு- Bal Gandharva: the nonpareil thespian[தொடர்பிழந்த இணைப்பு] Author- Mohan Nadkarni, Publisher-National Book Trust, 2002, Length – 77 pages
- Balgandharva and the Marathi theatre Author- Dnyaneshwar Nadkarni, Publisher- Roopak Books, 1988, Length- 159 pages
- Asa Balgandharva [1] Author- Abhiram Bhadkamkar, publisher- Rajhans Prakashan, 2011, length- 416 pages
குறிப்புகள்
தொகு- ↑ Janaki Bakhle. Two Men and Music: Nationalism in the Making of an Indian Classical Tradition. Oxford University Press. p. 239. பார்க்கப்பட்ட நாள் 20 October 2005.
- ↑ Balgandharva is awkwardly paced, unevenly executed DNA 6 May 2011
- ↑ 3.0 3.1 Hansen, Kathryn (29 August 1998). "Stri Bhumika Female Impersonators and Actresses on the Parsi Stage". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி 33 (35): 2295. https://www.epw.in/journal/1998/35/special-articles/stri-bhumika-female-impersonators-and-actresses-parsi-stage.html.(subscription required)
- ↑ Aruṇa Ṭikekara (1992). The Kincaids, two generations of a British family in the Indian civil service. Promilla & Co. p. 237.
Bal Gandharva alias Narayanrao Rajhans was a Deshastha Brahmin and not a Chitpavan.
- ↑ Meera Kosambi. Gender, Culture, and Performance: Marathi Theatre and Cinema before Independence. Routledge. p. 272. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ Mohan Nadkarni. Bal Gandharva, the nonpareil thespian. National Book Trust. p. 10.
- ↑ Dnyaneshwar Nadkarni. Balgandharva and the Marathi Theatre. Roopak Books. p. 47.
- ↑ Mohan Nadkarni. Bal Gandharva, the nonpareil thespian. National Book Trust. p. 52.
- ↑ Sangeet Natak, Issues 83-86. Sangeet Natak Akademi. p. 67.
- ↑ Mohan Nadkarni. Bal Gandharva, the nonpareil thespian. National Book Trust. p. 77.
- ↑ Rachel Dwyer. Filming the Gods: Religion and Indian Cinema. Routledge. p. 76. பார்க்கப்பட்ட நாள் 27 September 2006.
- ↑ Sangeet Natak, Issues 83-86. Sangeet Natak Akademi. 1987. p. 67.
- ↑ Balgandharva and the Marathi Theatre. Roopak Books. 1988. p. 127.
- ↑ Aesthetics of Agra and Jaipur Traditions. Popular Prakashan. 2001. p. 18.
- ↑ Maharashtra, Land and Its People. Government of Maharashtra. 2009. p. 393.
- ↑ Encyclopedia of Indian Cinema. Routledge. p. 52.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.