அமிர்பாய் கர்நாடகி
அமிர்பாய் கர்நாடகி (Amirbai Karnataki ) ( 1906 – 3 மார்ச் 1965) ஆரம்பகால இந்தித் திரைப்படத் துறையின் பிரபல நடிகையும், பாடகியும், பின்னணி பாடகியுமாவார். மேலும் இவர் கன்னட கோகிலா என்று பிரபலமானவர். மகாத்மா காந்தி இவரது வைஷ்ணவ ஜன தோ என்ற பாடலின் தீவிர ரசிகராக இருந்தார்.[1]
அமிர்பாய் கர்நாடகி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1906 பாகல்கோட், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 3 மார்ச்சு 1965 இந்தியா | (அகவை 58–59)
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடுதல் |
தொழில்(கள்) | பாடகர், நடிகர் |
இசைத்துறையில் | 1935–1961 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர், கருநாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் பிலாகி என்ற நகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது ஐந்து சகோதரிகளில், இவரும் இவரது மூத்த சகோதரி கௌகர்பாயும் புகழையும், செல்வத்தையும் சம்பாதித்தனர். இவர், தனது மெட்ரிகுலேசனை முடித்துவிட்டு தனது பதினைந்து வயதில் மும்பைக்குச் சென்றார்.
தொழில்
தொகுஇவர், ஒரு திறமையான பாடகியாகவும், ஒரு நடிகையாகவும், கன்னடம் (தாய்மொழி) குஜராத்தி போன்ற மொழிகளில் சரளமாகவும் இருந்தார். இசை அமைப்பாளர் அவினாசு வியாசின் இசையமைப்பில் வெளிவந்த ரன்ரக்தேவி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "மஹ்ரே தே காம்ரே எக் பார் ஆவ்ஜோ" என்ற பாடல் இவரது பிரபலமான குஜராத்தி பாடல்களில் ஒன்றாகும். எச்.எம்.வி இசைத்தட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் இவரது பாடும் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் இவரை ஒரு கவ்வாலி பாட வைத்தார். அது மிகவும் பிரபலமானது. இந்த கவ்வாலி பாடல் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சௌகத் உசேன் ரிஸ்வி எழுதிய ஜீனத் (1945) படத்திற்காக பயன்படுத்தப்பட்டது.[3] இவரது மூத்த சகோதரி கௌகர்பாயும் ஒரு நடிகையாவார். 1934 இல் 'விஷ்ணு பக்தி' என்ற படத்தில் அமிர்பாய்க்கு ஒரு பாத்திரத்தை பெற உதவினார்.
ஆரம்பத்தில், இவர் ஒருசில படங்களில் பாடல்களைப் பாடினார். ஆனால் தான் விரும்பிய வெற்றியை அடைய முடியவில்லை. 1943 ஆம் ஆண்டில், பாம்பே டாக்கீஸின் கிஸ்மெட் (1943 திரைப்படம்) வெளியானதன் மூலம், இவர் புகழ் பெற்றார்: கிஸ்மெட்டின் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன. இதன் மூலம் இவர் பிரபலமானார். இந்த வெற்றியின் பின்னணியில் இருந்தவர் இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஒரு பாடும் நட்சத்திரமாக அறியப்பட்டார். ஆனால் இவரது வாழ்க்கையின் வீழ்ச்சியில் இவர் ஒரு பின்னணி பாடகியாக ஆனார். இவர் 1947 வாக்கில் தனது தொழில் உச்சத்தை அடைந்தார்.
1947 க்குப் பிறகு, லதா மங்கேஷ்கர் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக ஆனார். எனவே மீண்டும் இவர் நடிப்புக்கு மாறினார்.[2] இவரது பிற்காலத்தில், இவர் பெரும்பாலும் கதாபாத்திர வேடங்களில் நடித்தார். வகாப் பிக்சர்ஸ் திரைப்படமான செக்னாஸ் (1948) என்ற படத்திற்கு இவர் இசை அமைத்தார். அதே ஆண்டில் இவர் குஜராத்தி மற்றும் மார்வாரி படங்களுக்காக இந்தித் திரைப்படத் துறையை விட்டு வெளியேறினார். புகழ்பெற்ற திரைப்பட இதழ்களில் ஒன்றான "பிலிம் இந்தியா" அதன் ஒரு கட்டுரையில் 20 ஆம் நூற்றாண்டில் மற்ற பாடகர்கள் ஒரு பாடலைப் பாடுவதற்கு ரூ. 500 வாங்கி வரும்போது, அமிர்பாய் பதிவுக்கு ரூ.1000. வாங்கியதாக தெரிவித்தது.
காதல்
தொகுஇவரது திருமண வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளால் நிறைந்திருந்தது. இவரது முதல் திருமணம் திரைப்படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்ட நடிகரான கிமாலை வாலா என்பவருடன் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு அவருடனான திருமணம் இவருக்கு மகிச்சியாக இல்லை. இவர்கள் இவருவரும் பிரிந்தனர். 1947 ஆம் ஆண்டில், இந்தியப் பிவினைக்குப் பிறகு கிமாலை பாக்கித்தானுக்குச் சென்று ஒரு திறமையான நடிகராக திழந்தார். இவர், சிறந்த கணவராக இருந்த பராஸ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான பத்ரி காஞ்ச்வாலா என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.[1]
இறப்பு
தொகு1965 ஆம் ஆண்டில் இவருக்கு முடக்குவாத நோய் ஏற்பட்டது.நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த இவர் தனது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார். விஜயபுரா (பிஜாப்பூர்) நகரில் "அமீர் டாக்கீஸ்" என்ற பெயரில் ஒரு திரைப்பட அரங்கம் இவரது குடும்பத்தினரால் இன்னும் நடத்தப்பட்டு வருகிறது.
நூற்பட்டியல்
தொகு- Amirbai Karnataki https://sapnaonline.com/ameerbai-karnataki-rahamath-tarikere-pallava-prakashana-9789381920275-1621001 பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம்] Author- Rahamat Tarikere, Publisher- Pallava Prakashan, 2012
- Amirbai Karnataki https://web.archive.org/web/20150104195857/http://www.bookganga.com/eBooks/Books/details/4960116951099938816?BookName=Ameerbai-Karnatki] Marathi translation by- Prashant Kulkarni, Publisher- Granthali, 2014
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ganesh, Deepa (2015-02-27). "She was the love song" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/features/metroplus/she-was-the-love-song/article6941336.ece.
- ↑ 2.0 2.1 Profile of Amirbai Karnataki on womenonrecord.com website Retrieved 4 July 2019
- ↑ Soundtrack of Amirbai Karnataki on IMDb website Retrieved 4 July 2019
வெளி இணைப்புகள்
தொகு- Amirbai Karnataki filmography on Complete Index To World Film (C.I.T.W.F.) website பரணிடப்பட்டது 2020-10-29 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அமிர்பாய் கர்நாடகி , Filmography of Amirbai Karnataki