அகோபிலம்
அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் (பாடல்) பாடப்பெற்றது.[சான்று தேவை]
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அகோபிலம்[1] | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 15°07′28″N 78°44′13″E / 15.124529°N 78.736850°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கருடகிரி, கருடாச்சலம், கருடசைலம், திருச்சிங்கவேள் குன்றம் |
பெயர்: | அகோபிலம்[1] |
அமைவிடம் | |
ஊர்: | அகோபிலம் |
மாவட்டம்: | கர்நூல் |
மாநிலம்: | ஆந்திர பிரதேசம் |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரகலாதவத வரதர் |
தாயார்: | அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி |
தீர்த்தம்: | அடிவாரம் - இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்கவ தீர்த்தம்; மலைக்கோயில் - பாவநாசினி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
போக்குவரத்து
தொகுஇந்த கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் தொடருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன. சென்னையில் இருந்து வடமேற்காக சுமார் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தல புராணம்
தொகுஇது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
நவ நரசிம்மர்
தொகுஅகோபிலத்தில் கீழ்கண்ட ஒன்பது நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.
- பார்கவ நரசிம்மர்
- யோகானந்த நரசிம்மர்
- ஷக்ரவாஹ நரசிம்மர்
- அகோபில நரசிம்மர்
- குரொதகார (வராஹ) நரசிம்மர்
- கரன்ஜ்ஜ நரசிம்மர்
- மாலோல நரசிம்மர்
- ஜ்வால நரசிம்மர்
- பாவன நரசிம்மர்
இவை யாவும் 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது.
சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழாக்கள்
தொகுஒவ்வொரு மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று 9 நரசிம்மர்களுக்கும் அபிசேகம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் என்னும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழா நடக்கும் நாட்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் பகவானை தரிசிப்பார்கள்.
அகோபில மடம்
தொகுஇங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.