அக்கலா
Aggala
வகைஇனிப்பு
பரிமாறப்படும் வெப்பநிலைஉணவுக்குப்பின்
தொடங்கிய இடம்இலங்கை
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, தேங்காய், வெல்லம், மிளகு

அக்கலா (Aggala)(சிங்களம்: අග්ගලා) என்பது பாரம்பரிய இலங்கை இனிப்பு ஆகும்.[1] இது வறுக்கப்பட்ட அரிசி உருண்டைகளை அடிப்படையாகக் கொண்டு தேங்காய்த் துருவல், வெல்லம் அல்லது வெல்லப்பாகு மற்றும் மிளகு கொண்டு தயாரிக்கப்படுகின்றன.[2][3]

பாரம்பரியமாக வெயிலில் காயவைத்த புழுங்கல் அரிசியைப் பொடியாக அரைத்து (மாற்றாக அரிசி மாவைப் பயன்படுத்தலாம்) துருவிய அல்லது காய்ந்த தேங்காய், துருவிய வெல்லம் (கூந்தற்பனை அல்லது சர்க்கரையுடன் மாற்றலாம்), மிளகு மற்றும் தண்ணீருடன் கலக்கப்படுகிறது. பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டப்பட்டு, அரிசி தூள்/மாவுடன் பூசப்படுகிறது.[4] இலவங்கப்பட்டை பொடி மற்றும் வறுத்த எள்ளுடன் உருண்டைகளாக உருட்டியும் இதனைத் தயாரிக்கலாம். இவை சிற்றுண்டிகளாக உண்ணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Fernando, Mervyn; Peiris, Harrison (1973). Moonstone Guide to Ceylon (Sri Lanka). K. V. G. de Silva. பக். 38. 
  2. Duyff, R.L. (2003). Nutrition and Wellness: Teachers Wraparound Edition. Glencoe/McGraw-Hill School Publishing Company. https://archive.org/details/nutritionwellnes0000duyf_t3u6. 
  3. A Recipe for Aggala at Infolanka.com
  4. Dissanayake, Chandra (1968). Ceylon Cooking. Metro Printers. பக். 336. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கலா&oldid=3794294" இலிருந்து மீள்விக்கப்பட்டது