அரிசி மாவு (Rice flour (also rice powder) என்பது அரிசியில் இருந்து செய்யப்படும் மாவு ஆகும்.

அரிசி மாவை அரைக்கும் பாரம்பரிய உரல்

தயாரிப்பு தொகு

அரிசி மாவு வெள்ளை அரிசி அல்லது பழுப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மாவு செய்ய, நெல்லிலிருந்து உமி நீக்கப்படு பெறப்பட்ட, அரிசியில் இருந்து அரிசி மாவு தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பசையாக அரைக்கப்படும் அரிசியானது கைகளால் உரலில் அல்லது இயந்திர உரலில் அரைக்கப்படுகிறது. தூள் அரிசி மாவானது ஊறவைக்கப்பட்ட அரிசியை அதில் படிந்துள்ள ஈரத்தைப் போக்கி உரலில் உலக்கைக் கொண்டு இடித்து செய்யப்படுகிறது, அல்லது அதற்கென பிரத்தியேகமாக உள்ள அரவை இயந்திரத்தில் பணம் செலுத்தி அரைத்துக்கொண்டு வருகின்றனர்.

வகைகள் தொகு

சப்பானில் அரிசிமாவை கோமிகோ( (米粉 komeko?) (米粉) என்று அழைக்கப்படுகிறது இது இரண்டு வகைகளில் பசையாகவும், தூளாகவும் கிடைக்கிறது.[1]

பயன்கள் தொகு

பசையாக அரைக்கப்படும் அரிசி மாவு இட்டலி, தோசை போன்ற உணவுப் பெருட்களுக்கு மூலப் பொருளாக உள்ளது. பசைத்தன்மையற்ற தூளாக உள்ள அரிசி மாவானது கொழுக்கட்டை, அக்கி ரொட்டி மாவிளக்கு போன்றவற்றைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது. சிலர் அரிசி மாவைக்கொண்டு மாக் கோலம் இடுவர் இந்த மாக்கோலத்தில் உள்ள அரிசி மாவு எறும்பு உள்ளிட்ட பூச்சிகளுக்கு உணவாகட்டும் என்ற எண்ணத்தில் மாக்கோலம் இடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Hosking, Richard (1997). A Dictionary of Japanese Food. Tuttle Publishing. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780804820424. https://books.google.com/books?id=1avA7zEYCQ0C&pg=PA191. பார்த்த நாள்: Jan 29, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசி_மாவு&oldid=2846431" இலிருந்து மீள்விக்கப்பட்டது