அக்காந்தொசெபலா

ஒட்டுண்ணி புழுத் தொகுதி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Acanthocephala|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

அக்காந்தொசெபலா (Acanthocephala) என்பது ஒட்டுண்ணி புழு தொகுதி ஆகும். இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுநாணி உயிரினங்களின் குடலில் வாழ்வன. அந்த குடலில் இருக்கும் உணவைத் தம் உடலின் மேற் சுவர் வழியாகவே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளுகின்றன. இவற்றில் சில வகைகள் மிகச் சிறியவையாக, இரண்டு மில்லி மீட்டருக்கும் கிறைவான அளவில் இருக்கின்றன மேலும் சில இனங்கள் 500 மில்லி மீட்டர் அல்லது இருபது அங்குலத்துக்கு மேல் இருக்கும். பெண் புழுக்களைவிட ஆண் புழுக்கள் சிறியவையாக இருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் தமது ஆதாரப் பிராணிகளுக்குள்ளே அவற்றின் உணவின் வழியாகத்தான் எப்போதும் புகுகின்றன. இவற்றின் முதல் ஆதாரப் பிராணி ஒரு கணுக்காலி. அதிலிருந்து அதை இரையாகக் கொள்ளும் மற்றொரு பிராணி இதற்கு ஓம்புயிராக இருக்கலாம். அந்தப் பிராணியிலிருந்து அதை உட்கொள்ளும் மீன், நீர்நில வாழ்வன பறவைகள், பாலூட்டிகள் போன்ற முதுகுநாணிகளான உடம்புக்குள் வரலாம்.[2][3][4] இவற்றில் 1420 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[5][6]

அக்காந்தொசெபலா
Corynosoma wegeneri
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Acanthocephala
Classes

See text.

விளக்கம்

தொகு

இந்தப் புழுக்களில் காணும் சிறப்பான உறுப்பாக உடலின் முன்முனையிலுள்ள நாக்குப்போல நீட்டத்தக்க உறிஞ்சி குழல் ஆகும். இதை தேவைப்படுப்மோது வெளியே நீட்டவும் உள்ளே இழுத்துக் கொள்ளவும் இயலும். இதன் உடல் மேல்பகுதியில் கொக்கி போன்ற முட்கள் இருக்கும். இந்த கொக்கிகளினால் இந்தப் புழுக்களானது ஆதர உயிரின் குடற் சுவரை நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கும். இவற்றில் பல இனப் புழுக்களின் உடம்பின் மேலும் முட்கள் இருக்கலாம். ஆண் பெண் புழுக்கள் இணை சேர்ந்து, பெண் புழுவின் உடலுக்குள் முட்டைகரு உருவாகி அவை ஆதாரப்பிராணியின் மலத்துடன் வெளியே வரும். இந்தக் கருப்பட்ட முட்டையை நிலத்திலுள்ள வண்டுகளின் லார்வாக்கள் உண்ணும்போது, அவற்றின் உணவுப்பாதையில் முட்டை பொரித்து அக்காந்தர் என்னும் நிலைமை அடைகிறது. அது வளர்ந்து உருமாறி அக்காந்தெல்லா நிலையடைகிறது. இந்த நிலையில்தான் இது வேறு பிராணிகள் உடலில் ஒட்டுண்ணியாகப் பற்றக்கூடிய ஆற்றலைக் கொண்டதாக ஆகிறது. வண்டின் லார்வாவில் உள்ளவரையிலும் அக்காந்தெல்லா முதிர்நிலை அடைவதில்லை. அந்த லார்வாவைப் பன்றி, பறவை போன்ற ஒரு முதுகுநாணி உண்டால் அதன் குடலில் அக்காந்தெல்லா நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலையடைகிறது.அப்போதுதான் இந்தப் புழுவின் வாழ்க்கை வட்டம் முழுமையடைகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Crompton, David; Thomasson, William; Nickol, Brent B. (1985). Biology of the Acanthocephala. Cambridge University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521246743.
  2. de Buron, I.; Golvan, Y. J. (1986). "Les hôtes des Acanthocéphales. I — Les Hôtes intermédiaires". Annales de Parasitologie Humaine et Comparée 61 (5): 581–592. doi:10.1051/parasite/1986615581. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-4150. http://www.parasite-journal.org/articles/parasite/abs/1986/05/parasite1986615p581/parasite1986615p581.html.   
  3. Golvan, Y. J.; De Buron, I. (1988). "Les hôtes des Acanthocéphales. II — Les hôtes définitifs. 1. Poissons". Annales de Parasitologie Humaine et Comparée 63 (5): 349–375. doi:10.1051/parasite/1988635349. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-4150. http://www.parasite-journal.org/articles/parasite/abs/1988/05/parasite1988635p349/parasite1988635p349.html.   
  4. Roberts, Larry S.; Janovy, Jr., John (2009). Foundations of Parasitology (Eighth ed.). McGraw-Hill. p. 502. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780073028279.
  5. Freeman, Scott, Lizabeth Allison, Michael Black, Greg Podgorski, and Kim Quillin. Biological Sciences. 5th ed. Glenview, Il: Pearson, 2014. 638. Print.
  6. Encyclopedia of Life, பார்க்கப்பட்ட நாள் 24 July 2015
  7. "அக்காந்தொசெபலா". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன். சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 4. அணுகப்பட்டது 15 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காந்தொசெபலா&oldid=3891723" இலிருந்து மீள்விக்கப்பட்டது