அக்கிபிக்கி மக்கள்
ஹக்கிபிக்கி (Hakkipikki) மேற்கிந்தியாவைச் சேர்ந்த பழங்குடி மக்களான இவர்கள் தற்போது கருநாடகம் மாநிலத்தின் சிமோகா மாவட்டம், தாவண்கரே மாவட்டம் மற்றும் மைசூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஹக்கிபிக்கி பழங்குடி மக்கள் தொகை 11,892 ஆக உள்ளது. ஹக்கிபிக்கி மக்கள் இந்திய-ஆரிய மொழிக் குடுமபத்தைச் சேர்ந்த வாக்கிரி பூலி மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி ஏறக்குறைய குஜராத்தி மொழியை ஒத்துள்ளது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
11,892[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
கருநாடகம் | 11,892 |
மொழி(கள்) | |
வாகரி | |
சமயங்கள் | |
இந்து சமயம் |
பெயர்க் காரணம்
தொகுகன்னட மொழியில் ஹக்கி என்றால் பறவை: பிக்கி எனில் வேட்டையாடுபவர். துவக்க காலத்தில் இம்மக்கள் கருநாடக மாநிலத்தில் பறவைகளை வேட்டையாடி பிழைத்ததால், இம்மக்களை கன்னட மக்கள் ஹக்கிபிக்கிகள் என்று அழைத்தனர்.[2]
வரலாறு
தொகு450 ஆண்டுகளுக்கு முன்னர் ஹக்கிபிக்கி மக்களின் முன்னோர்கள் மேவார் மன்னர் மகாராணா பிரதாப் ஆட்சியில் வீரர்களாக இருந்தனர். முகலாயப் பேரரசு மேவார் நாட்டை வென்றதால், இம்மக்கள் மேவாரை விட்டு முதலில் ஆந்திரப் பிரதேசம் பின்னர் கர்நாடகாவில் குடியேறினர்.[3][4]
சமூக அமைப்பு
தொகுஹக்கிபிக்கி மக்கள் தாய்வழி சமூக அமைப்பை பின்பற்றுகின்றனர்.[3] இச்சமூகத்தில் மணமகள் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதுடன், திருமணச் செலவையும் மணமகன் வீட்டாரே செய்யும் பழக்கம் உள்ளது.[5]
தொழில்
தொகுதற்போது சில ஆண்டுகளாக ஹக்கிபிக்கி மக்கள் நீண்ட கூந்தல் மற்றும் முடி உதிராமைக்கு ஒரு வகையான எண்ணெய்யை தயாரித்து விற்கின்றனர்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A-11 Appendix: District wise scheduled tribe population (Appendix)". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 4 September 2024.
- ↑ "HAKKIPIKKI DOCUMENTATION". Scheme for Protection and Preservation of Endangered Languages, Government of India.
- ↑ 3.0 3.1 Patil, Ashok; Prabhakar, Jai; Mali, Siddappa (3 April 2024). "Gory and Ghoulish Practice among Hakki-Pikki Tribal Community of Karnataka: Offering Animals to the Gods and Spirits". Indian Journal of Research in Anthropolog (Index Copernicus International): 35. https://journals.indexcopernicus.com/api/file/viewByFileId/2023858.
- ↑ "Hakkipikki/Pardhi". Central Institue of Indian Languages, Government of India.
- ↑ "Documentary Name-Place-Animal-Thing introduces Karnataka’s Hakki Pikki tribe and its oddly named people". Firstpost. 28 May 2018. https://www.firstpost.com/living/documentary-nameplaceanimalthing-introduces-karnatakas-hakki-pikki-tribe-and-its-oddly-named-people-4480917.html.
- ↑ 'முடி உதிராது, கருப்பாக நீளமாக வளரும்' - இந்த எண்ணெயை பழங்குடியினர் எவ்வாறு தயாரிக்கின்றன
- ↑ Hakki Pikkis caught in Sudan conflict: Why this tribe of bird catchers travels to Africa from Karnataka