அக்கீம் அப்துல் அமீது
அக்கீம் அப்துல் அமீது (Hakim Abdul Hameed) கிரேக்க-அராபிய வைத்திய முறையான யூனானி மருத்துவ முறையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவராவார். இவரது காலம் 1908 முதல் 1999 வரையுள்ள ஆண்டுகளாகும். இயாமியா அம்தார்து என்ற உயர்கல்வி நிறுவனத்தை நிறுவி அதிபராகவும் அமீது பணியாற்றினார். அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.[1][2] மேலும் இவர் அம்தார்து ஆய்வகங்களின் நிறுவனராகவும் தலைமை அறங்காவலராகவும் இருந்தார்.[1] இவரது சேவைகளைப் பாராட்டிய இந்திய அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதையும்[3] 1992 ஆம் ஆண்டு மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்மபூசண் விருதையும்[4][5] வழங்கி சிறப்பித்தது.
அக்கீம் அப்துல் அமீது Hakim Abdul Hameed | |
---|---|
பிறப்பு | 14 செப்டம்பர் 1908 தில்லி, இந்தியா |
இறப்பு | 22 சூலை 1999 இந்தியா |
பணி | கல்வியாளர்,மருத்துவர் |
அறியப்படுவது | யூனானி மருத்துவமும் கல்வியும் |
விருதுகள் | பத்மசிறீ பத்ம பூசண் |
தொழில்
தொகுஅக்கீம் அப்துல் அமீது 1993 ஆம் ஆண்டு புதுதில்லியிலுள்ள சங்கம் விகாரில் அம்தார்து பொதுப் பள்ளிக்கூடத்தை நிறுவினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Aligarh Movement". Aligarh Movement. 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
- ↑ "Hamdard". Hamdard. 2015. Archived from the original on 14 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Two Circles". Two Circles. 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
- ↑ S. P. Agrawal (1993). Development Digression Diary Of India. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170223054. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.