அக்சயா திட்டம்

அக்சயா திட்டம் (Akshaya project) முதன்முதலில் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டது, தற்போது, மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவின் முதல் மாவட்ட அளவிலான கணினிக் கல்வித் திட்டமாகும், மேலும் இது தற்போதுவரை அறியப்பட்ட உலகின் மிகப்பெரிய இணைய நெறிமுறை (IP) அடிப்படையிலான கம்பியில்லாப் பிணையங்களில் ஒன்றாகும். நவம்பர் 2002-இல், கேரள மாநில அரசு மலப்புரத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு நபராவது அந்த மாவட்டத்தில் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. மலப்புரம் தற்போது இந்தியாவின் முதல் மின்னணு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று கூறப்படுகிறது.

அக்சயா திட்டம்
செயல்நோக்கு அறிக்கைநவீனமயமாக்கல் மூலம் கேரளாவில் சீர்த்திருத்தம் ஏற்படுத்துதல்
உற்பத்திகள்கணினி எழுத்தறிவு
இடம்கேரளா
Founderகேரள அரசு
நாடுஇந்தியா
Establishedநவம்பர் 18, 2002 (2002-11-18)
Fundingகேரள அரசு
தற்போதைய நிலைசெயலில்
இணையத்தளம்akshaya.kerala.gov.in

வரலாறு

தொகு

கேரள மாநிலத் தகவல் தொழில்நுட்ப இயக்கத்தின் கீழ் மலப்புறம் மாவட்டம் அரியல்லூரில் 2002 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது . பி. கே. குன்ஹாலிக்குட்டி [1] (முன்னாள் மாநில தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்) , அப்துரஹிமான் ரந்ததானி [2] ஆகியோரின் முயற்சியின் விளைவாக, அப்போதைய கேரள முதல்வராக இருந்த அ. கு. அந்தோனி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மாநிலத்தில் மின் எழுத்தறிவுத் திட்டத்தை நிறுவுவதற்காக இருபது நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார்.

 
வென்கோடில் உள்ள அக்சயா கேந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala embarks on mass computer literacy drive". 1 June 2003 – via The Economic Times - The Times of India.
  2. "Members - Kerala Legislature". www.niyamasabha.org.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சயா_திட்டம்&oldid=3987457" இலிருந்து மீள்விக்கப்பட்டது