அக்னி பாதை திட்டம்

இந்திய முப்படைகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டம்

அக்னி பாதை திட்டம் (Agnipath Scheme) என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும்.[1] அக்னி பாதை திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.[2]. 2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அக்னி பாதை திட்டம் செப்டம்பர் 2022 முதல் செயல்படுத்தப்படுகிறது.

பின்னணி

தொகு

2019 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் ஆள்சேர்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யாததற்காக கோவிட்-19 தொற்றுநோயை இந்திய அரசு மேற்கோள் காட்டியது. இதற்கிடையில், 50,000-60,000 வீரர்கள் ஆண்டுதோறும் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இச்சூழல் இராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை பாதிக்கத் தொடங்கியது.[3]

வரலாறு

தொகு

இராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் அக்னி பாதை என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை[4] ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தும் திட்டமே அக்னி பாதை திட்டமாகும். ஆட்சேர்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும். சுமார் 45000 முதல் 50000 உறுப்பினர்களைக் கொண்ட பயிற்சி பெற்ற அக்னிவீரர்கள் இந்த திட்டத்தின் பின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள். 4 ஆண்டு பணிக்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.[5]

தகுதிகள்

தொகு
  1. 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் ஆவர்.[6][7][4]
  1. இராணுவத்தில் சேருவதற்கு நடைமுறையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னி பாதை திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும். 10 அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
  2. பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
  3. இந்தியத் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணிபுரியவேண்டும்.

பதவிக்காலம்

தொகு

அக்னிவீரர்கள் இந்திய இராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரியலாம். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர இராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். விருப்பம், பணித் திறன் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த நடவடிக்கை இருக்கும். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.[7] இவ்வாறு வெளியேற்றப்ப்பட்டவர்களுக்கு அசாம் ரைப்பிள்ஸ் அல்லது மத்திய சேமக் காவல் படைகளில் சேர்வதற்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=3056417 துணை ராணுவத்தில் 10 சத இடஒதுக்கீடு: ‛அக்னிவீரர்‛களுக்கு உள்துறை அமைச்சகம் சலுகை]</ref>

வரம்பு

தொகு

அக்னி பாதை திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற வேண்டும். இவர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.[8][9][10].

விமர்சனங்கள்

தொகு

அக்னி பாதை திட்டம் நீண்ட காலப் பணி, ஓய்வூதியம் மற்றும் பழைய தேர்வு முறையில் இருந்த பிற சலுகைகள் உட்பட பல நலத்திட்டங்களை தவிர்க்கும் வகையில் உள்ளது.[11] புதிய திட்டத்தின் விதிகள் இராணுவ ஆர்வலர்களை திருப்திபடுத்தவில்லை. குறுகிய கால சேவை, முன்கூட்டியே விடுவிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்காதது மற்றும் 17.5 முதல் 21 வயது வரையிலான வயது வரம்பு காரணமாக தற்போதைய ஆர்வலர்கள் பலர் இந்திய ஆயுதப்படைகளில் பணியாற்ற தகுதியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளமை போன்றவை இந்த அதிருப்திக்கு காரணங்களாக அறியப்படுகின்றன.[12]

இராணுவ ஆட்சேர்ப்புக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்திய அரசாங்கம் எந்த வெள்ளை அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்தத் திட்டம் நாடாளுமன்றத்திலோ அல்லது பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. திட்டம் பற்றிய எந்தத் தகவலும் அதன் அறிவிப்புக்கு முன் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.[13]

இந்திய அரசுக்கு எதிரான எதிர்கட்சிகள் அக்னி பாதை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திட்டத்தை பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. காங்கிரசு கட்சி இந்தத் திட்டம் நாட்டு நலனுக்காகவோ அல்லது அதன் பாதுகாப்பிற்காகவோ தீட்டப்படவில்லை என்றும் திட்டத்தைத் திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. [14][15]

எதிர்ப்புகள்

தொகு

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இந்தியாவின் பல மாநிலங்களில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. திட்டத்தின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்றும் 25% பேர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் வேலையில் சேரமுடியும் என்று கூறி பீகாரில் இளைஞர்கள், நெடுஞ்சாலைகளில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.[16] பீகாரின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் செய்த நிலையில் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். கோபமடைந்த இராணுவ ஆர்வலர்கள் இரயில்கள் மற்றும் பேருந்துகளையும் எரித்தனர். போராட்டங்களால் 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இரயில்கள் பாதிக்கப்பட்டன. 35 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "அக்னிபத் திட்டம்: தமிழ்நாடு, பிகார் உள்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  2. "Agnipath: Violent protests in Bihar over Indian army's new hiring plan". BBC News. 16 June 2022. https://www.bbc.com/news/world-asia-india-61821639. 
  3. "No recruitment in two years has begun 'pinching' the Indian Army". The New Indian Express. 24 March 2022. https://www.newindianexpress.com/nation/2022/mar/21/no-recruitment-in-two-years-has-begun-pinchingthe-indian-army-2432652.html. 
  4. 4.0 4.1 "Explained: The Agnipath scheme for recruiting soldiers — what is it, how will it work?" (in en). The Indian Express. 15 June 2022. https://indianexpress.com/article/explained/agnipath-scheme-for-recruiting-soldiers-7969432/. 
  5. "அக்னிபத்து திட்டத்தின் முழு விவரம்:யாருக்குப் பயன்?". தினமணி. https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2022/jun/15/full-details-of-agneepath-project-who-benefits-3862557.html. பார்த்த நாள்: 17 June 2022. 
  6. ராணுவத்தில் அக்னி வீரர்கள் சேருவது எப்படி... அக்னிபாத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்னென்ன? முழு விவரம்
  7. 7.0 7.1 "What is Agnipath scheme, who all can apply? Check eligibility, salary and other details". The Economic Times. 16 June 2022. https://economictimes.indiatimes.com/news/defence/what-is-the-agnipath-scheme-who-all-can-apply-all-you-need-to-know/articleshow/92225306.cms?from=mdr. 
  8. "Agnipath scheme is proof that Modi govt can bring change for good. But an open mind is key". ThePrint. 16 June 2022. https://theprint.in/opinion/agnipath-scheme-is-proof-that-modi-govt-can-bring-change-for-good-but-an-open-mind-is-key/998767/. 
  9. "Agnipath: Army aspirants stage protests over job security, pensions in Bihar, Rajasthan | Top Points" (in en). India Today. 16 June 2022. https://www.indiatoday.in/india/story/agnipath-scheme-protest-bihar-jaipur-job-security-pension-1962966-2022-06-16. 
  10. Pandey, Devesh K.; Kumar, Anuj (16 June 2022). "Many veterans and politicians say Agnipath scheme may harm Army morale" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/many-veterans-and-politicians-say-agnipath-scheme-may-harm-army-morale/article65530594.ece. 
  11. "What is Agnipath scheme: Why Agniveer aspirants in Bihar protesting against it". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  12. 12.0 12.1 "'Agnipath' Protests In 7 States, Mobs Burn Trains, Block Roads: 10 Points". NDTV.com. 17 June 2022. https://www.ndtv.com/india-news/agnipath-protest-2-coaches-of-passenger-train-set-on-fire-by-mob-in-bihar-3074583. 
  13. Singh, Sushant (16 June 2022). "‘Agnipath’: What is India’s new military recruitment system?" (in en). www.aljazeera.com. https://www.aljazeera.com/news/2022/6/16/analysis-new-india-army-plan-may-have-devastating-consequences. 
  14. "Left parties demand scrapping of Agnipath scheme | India News - Times of India" (in en). The Times of India. PTI. 16 June 2022. https://timesofindia.indiatimes.com/india/left-parties-demand-scrapping-of-agnipath-scheme/articleshow/92252083.cms. 
  15. "Put Agnipath on hold, take it up in Parliament: Opposition | India News - Times of India" (in en). The Times of India. 17 June 2022. https://timesofindia.indiatimes.com/india/put-agnipath-on-hold-take-it-up-in-parliament-opposition/articleshow/92266506.cms. 
  16. "அக்னிபத் திட்டம் : மத்திய அரசு... விளக்கம்!". Dinamalar. 2022-06-17. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_பாதை_திட்டம்&oldid=3722179" இலிருந்து மீள்விக்கப்பட்டது