அக்னி வசந்த மகாபாரத விழா

அக்னி வசந்த மகாபாரத விழா என்பது வட தமிழகத்தில் திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். இந்த விழாவை பெரும்பாலும் நான்கைந்து ஊர்கள் சேர்ந்து நடத்தும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதார வளத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். விழா நடக்கும் நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலோ அல்லது பாரத கோயில் என்ற இடத்திலோ மகாபாரத சொற்பொழிவு நடக்கும், இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது, விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்து நடப்பதுதான்.

கூத்துகள்

தொகு

விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறவஞ்சி, கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், பகடைத் துகில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் போன்ற கூத்துகள் நடக்கும்.[1] இந்தக் கூத்திதின் கதாபாத்தரத்தை இவர்கள் பூசியுள்ள வண்ணங்களே பிரதிபலிக்கும். அர்ச்சுனனுக்கு பச்சை, கண்ணணுக்கு நீலம், பெண் வேடத்துக்கு பசிய மஞ்சள், சூரன், துரியோதனன் போன்றோருக்கு அடர் சிவப்பு போன்ற வண்ணங்களை முகத்தல் பூசி ஒப்பனை செய்து கூத்து நடக்கிறது.[2] கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத்துவங்கும்போது கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படுகிறது.[3] அன்று மாலை தீமிதி விழாவும் மறுநாள் தர்மர் பட்டாபிசேகம் நிகழ்ச்சியும் நடந்து விழா முடிகிறது.[4]

தமிழகத்தில் இந்த விழா நடக்கும் சில ஊர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு". செய்தி. தினகரன். 7 மே 2018. Archived from the original on 2018-05-07. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
  2. பிருந்தா சீனவிவாசன் (மே 19 2018). "துரியோதனன் படுகளம்". தி இந்து. 
  3. பிருந்தா சீனிவாசன் (29 மே 2016). "துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
  4. "அம்மூர் கோயிலில் துரியோதனன் படுகளம்". செய்தி. தினமணி. 29 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
  5. "துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு". செய்தி. தினமலர். 29 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
  6. "துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி". செய்தி. தினமலர். 22 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_வசந்த_மகாபாரத_விழா&oldid=3729872" இலிருந்து மீள்விக்கப்பட்டது