அக்பர்நாமா
அக்பர்நாமா என்பது பேரரசர் அக்பர் வாழ்க்கையைக் கூறும் நூல் ஆகும். இதை இயற்றியவர் அபுல் ஃபசல் ஆவார். இந்நூல் பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெரும் பாகங்கள் உள்ளன. அயினி அக்பரி இதன் மூன்றாம் பாகமாகும். அக்பர்நாமாவில் மொகலாய வம்சத்தைத் தோற்றுவித்த தைமூர் முதல் அக்பர் வரையிலான 300 ஆண்டு வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. 1602 ஆம் ஆண்டு வரை இது எழுதப்பட்டிருக்கிறது.[1]