அக்ரோட்ரேமா அர்னோட்டியானம்
அக்ரோட்ரேமா அர்னோட்டியானம் (தாவரவியல் பெயர்: Acrotrema arnottianum) என்ற பூக்கும் தாவரம், தில்லினேசியே (Dilleniaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் பிறப்பிடம், இந்திய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு என கண்டறிந்துள்ளனர்.[1] இத்தாவரயினம் பல்லாண்டுத் தாவரம் ஆகும். இது குட்டையான தண்டுப்பகுதியையும், முட்டை வடிவிலான இலைகளையும் கொண்டுள்ளது. பூக்கள் இருபாலின மலர்களாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருக்கின்றன. பழங்கள் நுண்ணறைகள் (follicules) கொண்டதாகவும், விதைகள் பளபளப்புடனும் இருக்கின்றன.[2]
அக்ரோட்ரேமா அர்னோட்டியானம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. arnottianum
|
இருசொற் பெயரீடு | |
Acrotrema arnottianum Wight, 1840 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acrotrema arnottianum Wight". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2024.
- ↑ "Acrotrema arnottianum - Arnott's Acrotrema". www.flowersofindia.net. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2024.