அக்லூஜ்
அக்லூஜ் (Akluj), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பாயும் நீரா ஆற்றின் கரையில் அமைந்த பேரூராட்சி ஆகும்.[1] அக்லூஜ், சோலால்பூருக்கு வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அக்லூஜ்
अकलुज | |
---|---|
ஆள்கூறுகள்: 17°53′N 75°1′E / 17.883°N 75.017°E | |
இந்தியா | இந்தியா |
அரசு | |
• நிர்வாகம் | பேரூராட்சி |
ஏற்றம் | 487 m (1,598 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 39,919 |
மராத்திய மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413101 |
தொலைபேசி குறியீடு எண் | +912185 |
வாகனப் பதிவு | MH-45 |
மக்களவைத் தொகுதி | மாதா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மல்சிரஸ் சட்டமன்றத் தொகுதி |
பேரூராட்சி | அக்லூஜ் பேரூராட்சி |
தட்ப வெப்பம் | ஆண்டின் சராசரி வெப்பம் 36 °C, சராசரி மழைப்பொழிவு 450 mm |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, அக்லூஜ் பேரூராட்சியின் மக்கள் தொகை 39,972 ஆகும். அதில் ஆண்கள் 20,318 மற்றும் பெண்கள் 19,654 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 967 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,240 மற்றும் 354 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 30,645 (76.67%), இசுலாமியர் 7,316 (18.3%), பௌத்தர்கள் 412 (1.03%), சமணர்கள் 1,530 (3.83%) மற்றும் பிறர் 0. 18% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "History brought to life through sculptures in Akluj". ஒன்இந்தியா. 16 June 2008 இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110909225648/http://news.oneindia.in/2008/06/16/history-brought-to-life-through-sculptures-in-akluj-1213625270.html.
- ↑ Akluj Population, Religion, Caste Census 2011