அங்கோரா ஆடு
அங்கோரா ஆடு (Angora goat) என்பது ஒரு ஆட்டு இனமாகும். இந்த ஆட்டிலிருந்து கிடைக்கும் மிருதுவான ரோமமானது உலகப் புகழ்பெற்ற மொகேர் என்னும் துணி நெய்ய அவசியமானதாக உள்ளது.
நிலை | ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (2007) |
---|---|
மற்றொரு பெயர் | அங்கோரா ஆடு, மொகேர் ஆடு |
தோன்றிய நாடு | துருக்கி |
பரவல் | உலகமெங்கும் |
பயன் | கம்பளி, உணவு |
பண்புகள் | |
எடை | ஆண்: 45 கி.கி |
பெண்: 35 கி.கி | |
உயரம் | ஆண்: 66 செ.மீ |
பெண்: 51 செ.மீ | |
ஆடு |
வரலாறு
தொகுஇந்த ஆடானது நடு ஆசியாவின் மார்க்கோர் காட்டு ஆட்டின் வம்சாவழியினதாக கருதப்படுகிறது.[1][2] இவை இப்பகுதியில் பல்லோலிதிக்கு அருகே இருந்து வந்தவையாகும்.[3] 1938-1952 ஆம் ஆண்டுகளில் வெளியான துருக்கிய லிரா பணத் தாள்களில் ஆங்கொரா வெள்ளாட்டுகள் சித்தரிக்கப்பட்டன.[4]
விளக்கம்
தொகுஅங்கோரா ஆட்டின் கொம்பானது செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். இதன் மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாக உடலில் தொங்கும். இதன் மயிரானது ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். சாதாரணமாக ஓர் ஆட்டில் இருந்து 2 1/2 ராத்தல் மயிர் கிடைக்கும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் கம்பளி ஆடைகளானது காசுமீர ஆடைகள் பாேல் மிக உயர்ந்தவை. இந்த ஆடுகளை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ John Lord Hayes (1868). The Angora goat: its origin, culture and products. Boston, 1868
- ↑ Olive Schreiner (1898). Angora goat ... : and, A paper on the ostrich ... London : Longmans, 1898
- ↑ Carol Ekarius (10 September 2008). Storey's Illustrated Breed Guide to Sheep, Goats, Cattle, and Pigs: 163 Breeds from Common to Rare. Storey Publishing. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60342-037-2.
- ↑ Central Bank of the Republic of Turkey பரணிடப்பட்டது 2009-06-15 at the வந்தவழி இயந்திரம். Banknote Museum:
2. Emission Group – Fifty Turkish Lira – I. Series பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்;
3. Emission Group – Fifty Turkish Lira – I. Series பரணிடப்பட்டது 2008-12-25 at the வந்தவழி இயந்திரம் & II. Series பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம் . – Retrieved on 20 April 2009. - ↑ "அங்கோரா ஆடு". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 24. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.