ஆசாதி கோபுரம்
ஆசாதி கோபுரம் (Azadi Tower; பாரசீக மொழி: برج آزادی; புர்ஜே ஆசாதி, பொருள்: "சுதந்திரக் கோபுரம்" அல்லது "விடுதலைக் கோபுரம்"), முன்னைய பெயர்: சஹ்யாது கோபுரம் (Shahyad Tower), برج شهیاد; (புர்ஜே சஹ்யாது, பொருள்: "மன்னரின் நினைவுக் கோபுரம்") என்பது ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் ஆகும். இது நகருக்கான மேற்கு நுழைவாயில் அடையாளமாகவும், நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.
ஆசாதி கோபுரம் | |
---|---|
برج آزادی | |
ஆசாதி கோபுரம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கலாச்சாரம் |
இடம் | தெஹ்ரான், ஈரான் |
ஆள்கூற்று | 35°41′58″N 51°20′16″E / 35.69944°N 51.33778°E |
நிறைவுற்றது | 1971 |
செலவு | $6 மில்லியன்[1] |
உயரம் | |
கூரை | 45 m (148 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | குசைன் அமநாத் |
அமைப்புப் பொறியாளர் | அரூவ் குரூப்[2] |
முதன்மை ஒப்பந்தகாரர் | MAP Company[3] |
வரலாறு
தொகு2,500 வருட ஈரானிய முடியாட்சியை நினைவு கூர்வதற்கான விழாவுக்காக 1971 இல் இது கட்டப்பட்டது. "தெஹ்ரானுக்காக நுழைவாயிலான இது "சஹ்யாது" (மன்னரின் நினைவிடம்) என முகம்மத் ரிசா ஷா பஹ்லவியைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பெயரிடப்பட்டிருந்தது. ஆனாலும், "ஆசாதி" (சுதந்திரம்) என 1979 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின் பெயர் மாற்றம் பெற்றது. இது 50 மீட்டர் (164 அடி) உயரமும் முற்றிலும் வெட்டப்பட்ட பளிங்கு மூலம் அணியூட்டப்பட்டது.[4][5][6]
கட்டுமானம்
தொகுகுசைன் அமனாத்து எனும் கட்டடக்கலைஞர் சசானிய, அகாமனிசிய கால கட்டடக்கலையின் இணைப்பு மூலங்களினதும், பின் பாரசீகக் கட்டிடக்கலையும் கொண்ட இந்நினைவுச் சின்னத்தை நிர்மானிப்பதற்கான போட்டியில் வென்றார்.[7]
அமனாத்து ஒரு பகாய் சமயம் சார்ந்தவர். இவர் ஈரானியப் புரட்சியாலும் பலசமய நீக்கலாலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.[8]
இக்கோபுரம் ஆசாதி கலாச்சார வளாகத்தின் பகுதியாக தெக்ரானின் ஆசாதி சதுக்கத்தின் 50,000 m² பகுதியில் அமைந்துள்ளது. கோபுரத்தின் அடியில் சில நீரூற்றுக்களும் நிலத்தின் கீழ் நூதன காட்சிச்சாலையும் அமைந்துள்ளது.
இஸ்பகான் மாகாண பளிங்கு கற்கள் கொண்டு கட்டப்பட்ட இதில் எட்டயிரம் கற் தொகுதிகள் உள்ளன. கற்கள் கன்பர் ரகிமி என்பவர் மூலம் விநியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லினதும் அமைப்பு கணினி மூலம் கணக்கிடப்பட்டது. கோபுரக் கட்டுமானப் பணிகள் சிறந்த ஈரானிய கற்கொத்தன் கபாஃர் தவர்பனா வர்னோஸ்பதரணி என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. பிரதான பொருராதார உதவி ஐநூறு ஈரானிய நிறுவனங்கள் குழுமத்தினால் வழங்கப்பட்டது. அதன் திறப்பு விழா 16 அக்டோபர் 1971 அன்று இடம் பெற்றது.
அல்ஜியர்ஸ் நகரிலுள்ள முக்கிய வீரத்தியாகிகள் நினைவு மண்டப (கட்டப்பட்டது, 1982) அமைப்பு இக்கோபுரத்தின் பாரிய தாக்கம் செலுத்தி, பொதுவான வடிவமைப்பிலும் விபரங்களிலும் காணப்படுகிறது.
நூதன காட்சிச்சாலை
தொகுகோபுரத்திற்கான நுழைவாயில் பிரதான கவிகை மாடத்திற்கு நேரே கீழாக அமைந்து அடித்தளத்தில் அமைந்துள்ள ஆசாதி நூதன காட்சிச்சாலைக்குச் செல்கிறது. கருப்புச்சுவர்களும் கட்டடத்தின் விகிதத் தொடர்புகளும் கடுமையானவை. கண்ணாடிப்பெட்டி ஊடாக வரும் ஒளி கட்டுபடுத்தப்பட்ட பாரிய கதவுகள் நிலவறைக்கு திறக்கப்பட்டிருக்கிறது. தங்கம், கண்ணாடிப் பூச்சு வேலைப்பாடுகள், நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டம், பளிங்கு, நுண்ணிய ஓவியப்படம், ஓவியங்கள் ஆகியன கருப்பு பளிங்குச் சுவர்களில் அமைந்துள்ளன. கூரை சிமிட்டிக் கலவை சல்லடைக்கண்ணால் உருவானது. கிட்டத்தட்ட ஐம்பது துண்டுகளின் தெரிவுகள் ஈரான் வரலாற்றின் குறிப்பிட்ட காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
பிரதான காட்சிக்காக சைரஸ் நீள் உருண்டையின் பிரதி (பிரித்தானிய அருங்காட்சியகம் அதன் மூலத்தைக் கொண்டுள்ளது) வைக்கப்பட்டுள்ளது. நீள் உருண்டையின் மீது ஆப்பெழுத்து சாசன மொழிபெயர்ப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, நூதனசாலையின் ஒலி-காட்சி திணைக்களத்திற்குப் போகும் காட்சியங்கள் ஒன்றின் சுவரில் அமைந்துள்ளது. இதன் எதிரில், அலங்காரத்தட்டு வெள்ளைப் புரட்சியில் பனிரெண்டு விடங்களையும் பட்டியலிட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "MEED". Middle East Economic Digest 15. 29 ஒக்டோபர் 1971.
- ↑ "Hossein Amanat with Benjamin Tiven". Bidoun. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2015.
- ↑ Grigor, Talinn (2003). "Of Metamorphosis Meaning on Iranian Terms". Third Text 17 (3): 207–225.
- ↑ "Yahoo News – Latest News & Headlines". news.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ http://media.charlotteobserver.com/smedia/2009/06/15/19/654-The_Daily_Edit_0019.standalone.prod_affiliate.138.JPG[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hureau, Jean. Iran Today, 2nd. Ed, editions j.a.
- ↑ "BBC فارسی - ايران - 'برج آزادی پس از۲۰ سال شسته می شود'". bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ http://www.cbc.ca/news/citizenbytes/2009/06/iran_monument_daughter_of_the_1.html