அசிகர் கோட்டை

அரியானா மாநில கோட்டை

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹான்சி நகரத்தில் அம்டி ஏரியின் கிழக்குக் கரையில் ஹான்சி கோட்டை என்று அழைக்கப்படும் அசிகர் கோட்டை அமைந்துள்ளது. இது தில்லியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 9ல் சுமார் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பிருத்விராஜ் சவுகானின் கோட்டை அல்லது பிருத்வி ராஜ் சவுகான் கா கிலா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

30 ஏக்கர் பரப்பளவில், அதன் பிரதான நாட்களில் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 80 கோட்டைகளுடன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோட்டை பேரரசர் ஹர்ஷவர்தன வம்சத்தால் கட்டப்பட்டிருக்கலாம்.[2] பின்னர், இது தோமர்கள், சவுகான்கள், டெல்லி சுல்தானகம், மராத்தியப் பேரரசு, ஜாட் சீக்கியர்கள், சுதந்திர ஐரோப்பியர்கள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசு ஆகியோரின் கைகளுக்கும் சென்றது.

சொற்பிறப்பு தொகு

பண்டைய காலங்களிலில் இந்து ஆட்சியாளர்களின் வாள் தயாரிக்கும் மையமாக இருந்ததால், ஆசி (வாள்) மற்றும் கர் (கோட்டை) ஆகியவற்றிலிருந்து வாள்களின் கோட்டை அசிகர் என்றானது.

ஆசிதுர்கா, ஆசிகர், ஆசிகா, ஏ-சிகா, அன்சி, ஹன்சி போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கோட்டைக்கு பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளூர் வாய்வழி மரபுகள் இந்த பெயர்களை அசா ஜாட்டில் இருந்து பெறுகின்றன.[3]

வரலாறு தொகு

பழமைத்தன்மை தொகு

ஹான்சி கோட்டை அல்லது ஆசிகர் கோட்டை நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. கோட்டைக் கட்டப்பட்ட மேட்டில் குடியேற்றங்களின் நீண்ட வரலாறு இருந்ததைக் கி.மு. காலத்தைச் சேர்ந்த பண்டைய நாணயங்களின் அகழ்வாராய்ச்சி காட்டுகிறது.[4]

அசல் கோட்டை புகழ்பெற்ற பேரரசர் ஹர்ஷவர்தனா அல்லது அவரது தாத்தா பேரரசர் புஷ்யபூதி வம்சத்தின் (வர்தனா) பிரபாகரவர்தனாவால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 1982 இல், குப்தப் பேரரசு காலம் (பொ.ச 319 முதல் 605 வரை) மற்றும் 7 -8-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிலைகள் உட்பட சமண வெண்கலங்களைக் கொண்ட பெரிய பதுக்கல்கள் (பேரரசர் ஹர்ஷவர்தனாவின் புஷ்யபூதி வம்சத்தைச் சேர்ந்த காலம், பொ.ச. 500 முதல் 647 வரை) கண்டுபிடிக்கப்பட்டது. [5] (பொ.ச. - பொதுவான சகாப்தம்)

தோமர் ஆட்சி தொகு

பிரித்தானிய நூலகத்தின்படி, அசிகர் கோட்டை டெல்லியின் தோமர் மன்னரான தோமரா வம்சத்தைச் சேர்ந்த அனங்க்பாலா தோமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.[6] பல (மூன்று) தோமரா மன்னர்கள் "அனங்கபாலா" என்ற பெயரைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. [7] பொ.ச. 1000, அசிகர், ஹரியானா மற்றும் டெல்லி ஆகியவை தோமரா வம்சத்தின் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.[8] 1014 இல் கஜினி முகமது, தானேசர் மற்றும் ஹான்சியைத் தாக்கியபோது, இந்து கோவில்களை பெருமளவில் அழித்தார். மீண்டும் 1025 இல் சோமநாதர் கோயிலையும், ஜாட் மக்களையும் தாக்கினார்.[9] [10] பொ.ச. 1037 இல் ஹான்ஸியைத் தாக்க முகமது கஜினி தனது மகனை அனுப்பியிருந்தார். அவர் ஹான்சியின் வாள்வீரர்களைத் தாக்கி இந்து பெண்களை அடிமைத்தனத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர்கள் காசுனியில் விற்கப்பட்டனர்.[5] 1041 ஆம் ஆண்டில் தனது தந்தையைக் கொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக, முகமது கஜினியின் மருமகன் மவ்தூத் (கி.பி. 1041-50) அவரது மாமா முகமது கஜினியிடமிருந்து அரியணையைக் கைப்பற்றினார். 11 ஆம் நூற்றாண்டில் டெல்லியில் இருந்து இந்த பகுதியை ஆட்சி செய்த தோமர் வம்சத்தின் மஹிபால் தோமர், மவ்தூத்திடமிருந்து ஹான்சி மற்றும் தானேசர் பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். மேலும் டெல்லியில் மஹிபால்பூரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துண்டு துண்டான தோமரா கல்வெட்டுகளின் அடிப்படையில் மஹிபாலா, மஹிபாலபுராவில் (இப்போது மகிபல்பூர்) ஒரு புதிய தலைநகரை நிறுவினார் என்று கோட்பாடு உள்ளது. [8]

குறிப்புகள் தொகு

  1. "History of Hisar". District Administration, Hisar. Archived from the original on 4 February 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
  2. Planning a vacation? Here's why you should visit Hansi in Haryana or go trekking in Kemmanagundi, Economic Times, 3 Nov 2016.
  3. 2001, Devendra Handa, "JAINA BRONZE Hoard from HANSI A preliminary Study", Roopa-Lekhā, Volumes 67-71, Fine Arts & Crafts Syndicate Limited, I.M.H. Press, Delhi, page 1.
  4. "Gazetteer of Hisar" (PDF). Revenue Department, Government of Haryana. Archived from the original (PDF) on 1 May 2014. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
  5. 5.0 5.1 Jaina Bronzes From Hansi, by Devendra Handa, Indian Institute of Advanced Study, 2002
  6. The fort at Hansi, the Union flag flying from the top
  7. Upinder Singh 2008, ப. 570.
  8. 8.0 8.1 P. C. Roy 1980.
  9. Barnett 1999, ப. 74-78.
  10. Khan 2007, ப. 66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிகர்_கோட்டை&oldid=2893118" இலிருந்து மீள்விக்கப்பட்டது