அசிட்டைல்முப்பியூட்டைல்சிட்ரேட்டு
அசிட்டைல்முப்பியூட்டைல்சிட்ரேட்டு (Acetyltributylcitrate) என்பது C20H34O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வேதிப்பொருட்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் நெகிழ்வூட்டிச் சேர்க்கைப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது[1]. நிறமற்ற திரவமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. நகச்சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களில் இது ஒரு பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது. முப்பியூட்டைல்சிட்ரேட்டை அசிட்டைலேற்றம் செய்வதன் மூலம் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம். பிசு (2- எத்திலெக்சில்) தாலேட்டு மற்றும் இருசமநோனைல் தாலேட்டு ஆகியனவற்றிற்கு மாற்றான ஒரு நெகிழ்வூட்டியாக இது பயன்படுகிறது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
77-90-7 | |
ChemSpider | 6259 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6505 |
| |
பண்புகள் | |
C20H34O8 | |
வாய்ப்பாட்டு எடை | 402.48 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.046 கி/செ.மீ3 |
உருகுநிலை | −80 °C (−112 °F; 193 K) |
கொதிநிலை | 172 முதல் 174 °C (342 முதல் 345 °F; 445 முதல் 447 K) 1 மி.மீ. பாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Britt E. Erickson: Regulators And Retailers Raise Pressure On Phthalates, Chemical & Engineering News 93(25), 2015, p. 11–15.
- ↑ Ashford, R.D. Ashford's Dictionary of Industrial Chemicals. London, England: Wavelength Publications Ltd., 1994., p. 902.