அசிட்டோகுவானமீன்
அசிட்டோகுவானமீன் (Acetoguanamine) என்பது (CNH2)2CCH3N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெலாமீனுடன் தொடர்பு கொண்ட சேர்மமாக இது கருதப்படுகிறது. ஆனால் ஒரு மெலாமீனில் உள்ள அமினோ தொகுதி மெத்தில் தொகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். மெலாமீன் பிசின்கள் தயாரிப்பில் அசிட்டோகுவானமீன் பயன்படுத்தப்படுகிறது. மெலாமீன் ((CNH2)3N3) போல குறுக்குப்பிணைப்பு பலபடியாக அசிட்டோகுவானமீன் செயல்படுவதில்லை. அசிட்டோ என்ற முன்னொட்டு வரலாற்று வழியாக வந்ததாகும். இச்சேர்மத்தில் எந்தவொரு அசிட்டைல் குழுவும் கிடையாது. பென்சோகுவானமீன் இதனுடன் தொடர்புடைய சேர்மமாகும்[2]. சயனோகுவானிடினுடன் அசிட்டோ நைட்ரைலைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதனால் அசிட்டோகுவானமீனை தயாரிக்க முடியும்.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
6-மெத்தில்-1,3,5-டிரையசீன்-2,4-டையமீன்[1] | |
இனங்காட்டிகள் | |
542-02-9 | |
Beilstein Reference
|
118348 |
ChEBI | CHEBI:72475 |
ChemSpider | 10485 |
EC number | 208-796-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 10949 |
| |
பண்புகள் | |
C4H7N5 | |
வாய்ப்பாட்டு எடை | 125.14 g·mol−1 |
தோற்றம் | வெண்மை, ஒளிபுகா படிகங்கள் |
அடர்த்தி | 1.391 கி செ.மீ−3 |
உருகுநிலை | 274 முதல் 276 °C (525 முதல் 529 °F; 547 முதல் 549 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 252 °C (486 °F; 525 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- (H2N)2C=NCN + MeCN → (CNH2)2(CMe)N3
தற்காப்பு
தொகுவாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கப்படும்போதுஅசிட்டோகுவானமீனின் உயிர்கொல்லும் அளவு (LD50) 2740 மில்லிகிராம்/கிலோகிராம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acetoguanamine - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology information.
- ↑ "Amino Resins". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_115.pub2.