அசிட்டோன் ஐதரசோன்
அசிட்டோன் ஐதரசோன் (Acetone hydrazone) என்பது C3H8N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோபுரோப்பைலிடின் ஐதரசீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. ஐதரசோன் உருவாக்கத்திற்குப் பொதுவான வினையான அசிட்டோன் மற்றும் ஐதரசீன் சேர்மங்கள் ஒடுக்கவினைக்கு உட்பட்டு உருவாகும் முறையில் அசிட்டோன் ஐதரசோன் உருவாகிறது. 2-ஈரசோபுரோப்பேன் தயாரிப்பின் போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்மம் உருவாகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-யிலிடின் ஐதரசீன்
| |
வேறு பெயர்கள்
Isopropylidenehydrazine
| |
இனங்காட்டிகள் | |
5281-20-9 | |
ChemSpider | 71270 |
EC number | 226-110-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 78937 |
| |
பண்புகள் | |
C3H8N2 | |
வாய்ப்பாட்டு எடை | 72.11 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H301, H311, H314, H331, H351, H411 | |
<abbr class="abbr" title="Error in hazard statements">P203, P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P273, P280 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிட்டோன் ஐதரசோனை அசிட்டோன் அசினுடன் ஐதரசீனை சேர்த்து வினைபுரியச் செய்து பெருமளவில் தயாரிக்கலாம். இவ்வினை அசிட்டோன் மற்றும் ஐதரசீனின் நேரடி வினையாகும்.[3] அதுபோலவே, குறிப்பாக நீரின் முன்னிலையில் அசிட்டோன் அசின் மற்றும் ஐதரசீன் சேர்மங்கள் விகிதாச்சாரத்திற்கு ஆளாகி திரும்பவும் மீட்சியடைகின்றன.[3]
அசிட்டோன் ஐதரசோன் சேர்மமானது உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்தான ஐதராலேசினின் ன் வளர்சிதை மாற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும். இது இரத்த அழுத்த எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acetone hydrazone". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Andrews, S. D.; Day, A. C.; Raymond, P.; Whiting, M. C. (1970). "2-Diazopropane". Organic Syntheses: 27. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0392.; Collective Volume, vol. 6, 1988, p. 392
- ↑ 3.0 3.1 Day, A. C.; Whiting, M. C.. "Acetone Hydrazone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0010.; Collective Volume, vol. 6, p. 10
- ↑ "Direct-acting vasodilators". Journal of Clinical Hypertension 13 (9): 690–692. 2011. doi:10.1111/j.1751-7176.2011.00507.x. பப்மெட்:21896152.