அசிட்டோவசிட்டனிலைடு

அசிட்டோவசிட்டனிலைடு (Acetoacetanilide) என்பது CH3C(O)CH2C(O)NHC6H5 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அனிலினின் அசிட்டோவசிட்டமைடு வழிப்பொருளான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகவும் நீரில் மிகச்சிறிதளவே கரையக்கூடியதாகவும் உள்ளது. அசிட்டோவசிட்டனிலைடும் இதனுடன் தொடர்புடைய பல அனிலின் வழிப்பொருள் தயாரிப்புகள் யாவும் கரிம நிறமிகள் என்றழைக்கப்படும் அரிலைடு மஞ்சள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

அசிட்டோவசிட்டனிலைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசிட்டோவசிட்டைலமினோபென்சீன்
இனங்காட்டிகள்
102-01-2 Y
ChemSpider 7311
InChI
  • InChI=1S/C10H11NO2/c1-8(12)7-10(13)11-9-5-3-2-4-6-9/h2-6H,7H2,1H3,(H,11,13)
    Key: DYRDKSSFIWVSNM-UHFFFAOYSA-N
  • InChI=1/C10H11NO2/c1-8(12)7-10(13)11-9-5-3-2-4-6-9/h2-6H,7H2,1H3,(H,11,13)
    Key: DYRDKSSFIWVSNM-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7592
  • CC(=O)CC(=O)NC1=CC=CC=C1
பண்புகள்
C10H11NO2
வாய்ப்பாட்டு எடை 177.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை 83 முதல் 88 °C (181 முதல் 190 °F; 356 முதல் 361 K)
குறைவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பும் பண்புகளும்

தொகு

டைகீட்டினைப் பயன்படுத்தி அனிலினை, அசிட்டோவசிட்டைலேற்றம் செய்து அசிட்டோவசிட்டனிலைடு தயாரிக்க முடியும். அசிட்டோவசிட்டனிலைடுகளுடன் ஈரசோனியம் உப்புகளைச் சேர்த்து அசோ கூடுதல் வினைக்கு உட்படுத்துவதால் சாயங்கள் தயாரிக்க முடியும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோவசிட்டனிலைடு&oldid=2098573" இலிருந்து மீள்விக்கப்பட்டது