அசீசு சாஞ்சார்
அசீசு சாஞ்சார் (Aziz Sancar, பிறப்பு: 1946) துருக்கிய அமெரிக்க உயிர் வேதியியல் அறிவியலாளர் ஆவார். மூலக்கூற்று உயிர்வேதியியல் வல்லுநரான இவர் டி. என். ஏ. சீராக்கல் [1] ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார்.[2]. டி. என். ஏ. பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த தோமசு லின்டால், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பவுல் மோட்ரிச் ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.[3][4]. ஒளிவினை நொதி மற்றும் பாக்டிரியாக்களின் நியூக்ளியோடைடுகளை வெட்டி பழுதுபார்த்தல் போன்ற துறைகளிலும் இவருடைய பங்களிப்புகள் உள்ளன.
அசீசு சாஞ்சார் Aziz Sancar | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 8, 1946 சவூர், துருக்கி |
தேசியம் | துருக்கியர் |
துறை | உயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல், டி. என். ஏ. சீராக்கல் |
கல்வி கற்ற இடங்கள் | MD (இசுதான்பூல் பல்கலைக்கழகம், 1969) முனைவர் (டெக்சாசு பல்கலைக்கழகம், 1977) |
விருதுகள் | வேபி கோச் விருது, 2007 வேதியியலுக்கான நோபல் பரிசு, 2015 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Carroll SB; Wessler SR; Griffiths AJFl; Lewontin RC (2008). Introduction to genetic analysis. New York: W.H. Freeman and Co. p. 534. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-6887-9.
- ↑ http://www.med.unc.edu/biochem/asancar
- ↑ "DNA repair wins chemistry Nobel". 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2015.
- ↑ "The Nobel Prize in Chemistry 2015". www.nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.