அசீசு பாக்
அசீசு பாக் வில்லா ( Aziz Bagh Villa) என்பது எழுத்தாளரும் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அலுவலருமான ஆசனுதீன் அகமது அவர்களுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க குடியிருப்பு ஆகும்.[1] இந்தியாவின் ஐதராபாத்து நகரில் இது உள்ளது. 1899 ஆம் ஆண்டில் பாரசீக மற்றும் உருது மொழிக் கவிஞரான அசீசு யாங் பகதூர் இந்திய –செருமன் பாணியில் அசீசு பாக் வில்லாவைக் கட்டினார்.[2] 1997 ஆம் ஆண்டில் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை நிறுவனம் இக்குடியிருப்புக்கு கலாச்சார பாரம்பரிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது.[3]
அசீசு பாக்கின் பிரதான கட்டிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை பேரன்களான சம்சூதின் அகமது மற்றும் சாகீர் உதின் அகமது ஆகியோருக்கு சொந்தமாக உள்ளது.
சிறப்பு மிக்க இந்த பாரம்பரிய கட்டிடம் ஐதராபாத்து நகருக்கு பெருமை சேர்க்கிறது. சாகீர் உதின் அகமது தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அடிக்கடி அசீசு பாக்கு வீட்டிற்கு வந்து திரும்புவார். அமேசான் வெளியிட்ட “அசீசு பாக், கலாச்சார பாரம்பரியம்” என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
ஐதராபாத்து நகரத்தின் பழைய நகரத்தில் உள்ள நூர்கான் சந்தை பகுதியில் அசீசு பாக் ஒரு முக்கிய அடையாளமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ M. Roushan Ali (3 Feb 2013). "The grand old man of Aziz Bagh". தி டெக்கன் குரோனிக்கள். https://www.pressreader.com/india/deccan-chronicle/20130203/282750584116297.
- ↑ Sarah Khan (22 January 2015). "Returning to Hyderabad, Once a Land of Princes and Palaces". The New York Times. https://www.nytimes.com/2015/01/25/travel/once-a-land-of-princes-and-palaces.html.
- ↑ Awards (Heritage Awards Programme) 1997 பரணிடப்பட்டது 22 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம் INTACH website