அசுவத்தாமா (இசையமைப்பாளர்)
அசுவத்தாமா ( Aswathama) தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிந்த ஓர் இசையமைப்பாளர். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1] பி. என். ரெட்டி இயக்கிய தேவதா (1941) படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். பாக்யலட்சுமி மற்றும் தியாகையா ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பின்னர் இசை உதவியாளராக பணிபுரிந்து இசை அமைப்பாளராக ஆனார்.
அசுவத்தாமா | |
---|---|
பிறப்பு | நரசாபுரம், ஆந்திரப் பிரதேசம் | ஆகத்து 21, 1927
இறப்பு | 21 மே 1975 சென்னை | (அகவை 47)
பணி | இசையமைப்பாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | கமலா |
பிள்ளைகள் | காயத்திரி, சியாமளா |
வாழ்க்கை
தொகுஅசுவத்தாமா 1927ல் ஆந்திரப் பிரதேசத்தின்நரசாபுரத்தில் பிறந்தார். இவரது தந்தை வரதாச்சாரி ஜலியான்வாலா பாக் படுகொலை நடந்த நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றினார். பின்னர், இவரது தந்தை இராணுவத்தை விட்டு வெளியேறி துறவியாக மாறினார். இவரது தாயார் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னையிலுள்ள தனது சகோதரரின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அசுவத்தாமாவின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமாக இருந்தது. குடும்பத்தை நடத்துவதற்காக சிறு சிறு வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வந்தார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தெண்டுலூரி சிவராமையா, மகாவாடி வெங்கடப்பய்யா, டைகர் வரதாச்சாரியார் மற்றும் துவாரம் வேங்கடசுவாமி ஆகியோரிடம் இசையை முழுமையாகக் கற்றார். மல்லாடி ராமகிருஷ்ண சாஸ்திரி, சமுத்ராலா ராகவாச்சார்யா போன்றோர் இவருக்கு ஆதரவளித்தனர். 1951 இல் கமலா என்பவரை மணந்தார். சென்னை அனைத்திந்திய வானொலியில் சில காலம் கலைஞராகப் பணியாற்றினார். இவர்களுக்கு விஜயராகவன் என்ற ஒரு மகனும், காயத்திரி, சியாமளா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது இரண்டு மகள்களும் புகழ்பெற்ற வீணை கலைஞர்கள்.
இவரது மகள் காயத்திரி தமிழ் நாடு அரசால் அதன் இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக 2013 முதல் 2016 வரை பதவி வகித்தார். முன்னதாக தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.[2][3]
இறப்பு
தொகு1975ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தனது 48வது வயதில் சென்னையில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Balasubramanian, V. (17 December 2009). "On a nostalgic November evening". தி இந்து.
- ↑ இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் வீணை காயத்ரி
- ↑ "Tamilnadu Music and Fine Fine Arts University". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.