ஈ. காயத்திரி

‘வீணை காயத்ரி’ என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பிறப்பு: நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞர் ஆவார்.

வீணை காயத்ரி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பெற்றோர்: ஜி. அசுவத்தாமா (தெலுங்குத் திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்), கமலா அஸ்வத்தாமா (வீணைக் கலைஞர்). காயத்ரியின் இயற்பெயர்: காயத்ரி வசந்த ஷோபா. தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை பெற்றோரிடம் கற்றார். பிறகு டி. எம். தியாகராஜனிடம் (சங்கீத கலாநிதி விருது பெற்ற பாடகர் மற்றும் வாக்கேயக்காரர்) மாணவராக பயிற்சி பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தியாகராஜா விழாவில்’ நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9ஆவது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். இதன்பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். இசைத் தொகுப்புகள் பலவற்றை ஒலிதத் துறையில் வெளியிட்டுள்ளார்.

சிறப்புகள்

தொகு
  • 13ஆவது வயதில் ஒரு முதுநிலைக் கலைஞராக அனைத்திந்திய வானொலி, காயத்ரிக்கு அங்கீகாரம் தந்தது (1973).
  • தமிழக அரசால் அதன் இசை, நுண்கலை பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக 2013 நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார். முன்னதாக அவர் தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார்.[1][2]

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் வீணை காயத்ரி
  2. "Tamilnadu Music and Fine Fine Arts University". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._காயத்திரி&oldid=4167446" இலிருந்து மீள்விக்கப்பட்டது