அச்சனூர்

கிராமம் (தஞ்சாவூர்)

அச்சனூர் (Achanoor) என்பது ஒரு கிராமம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு மற்றும் கல்லணை இடையே அமைந்துள்ளது.[1] இந்த கிராமத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும். காவேரி பாசனப் பகுதியில் அமைந்திருப்பதால், வளமான நிலங்களைக் கொண்டுள்ளது. நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, வெங்காயம் மற்றும் தேங்காய் ஆகியவை கிராமத்தின் முக்கிய விளை பொருட்கள் ஆகும். அருகில் உள்ள கிராமங்களாக, மரூர், சாத்தனூர், வைத்தியநாதன் பேட்டை அமைந்துள்ளன. அச்சனூர் திருவையாற்றிலிருந்து 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) தொலைவிலும் தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சனூரில் வசிப்பவர்களில் 75% பேர் கத்தோலிக்க திருச்சபையினைச் சார்ந்தவர்கள். இங்குப் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், புனித அந்தோணியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அச்சனூர்
Achanoor
கிராமம்
அச்சனூர் Achanoor is located in தமிழ் நாடு
அச்சனூர் Achanoor
அச்சனூர்
Achanoor
தமிழ்நாட்டில் அமைவிடம்
அச்சனூர் Achanoor is located in இந்தியா
அச்சனூர் Achanoor
அச்சனூர்
Achanoor
அச்சனூர்
Achanoor (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°52′49″N 79°4′5″E / 10.88028°N 79.06806°E / 10.88028; 79.06806
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

மேற்கோள்கள்

தொகு
  1. "Achanur Village , Thiruvaiyaru Block , Thanjavur District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சனூர்&oldid=3306962" இலிருந்து மீள்விக்கப்பட்டது