அச்சுதா மானசா

அச்சுதா மனசா (Achuta Manasa) இந்தியா மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தின் பூர்வீக பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தில் ஒரு புகழ் மிக்கக் கலைஞராவார். [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] இவரது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இரவிசங்கர் தொடங்கி வைத்தார். [10] [11] [12] பண்டைய வரலாற்றில் அதன் கலாச்சார வேர்களைக் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவமான குச்சிப்புடியின் முன்னணி இளம் நிபுணராக மானசா ஒப்புக் கொள்ளப்படுகிறார். [13] மிகவும் திறமையான நடனக் கலைஞரான இவர் குச்சிபுடி நடனத்தின் பாரம்பரிய மரபுகளை உயிரோடு கொண்டுவருகிறார். [14]

அச்சுதா மானசா
அச்சுதா மானசா, குச்சிப்புடி நடனக்கலைஞர், ஆந்திரப் பிரதேசம்
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிகுச்சிப்புடி நடனக்கலைஞர்
வலைத்தளம்
achutamanasa.in

வாழ்க்கை தொகு

மானசா ஆந்திராவில் பூர்வீக இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். [1] [4] இவர் ராஜ்ய லட்சுமி மற்றும் ரவி சந்திரா ஆகியோரின் மகளாவார். [15] [10] இவரது தாயார் இராஜ்ய லட்சுமி கலைகள் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து, தனது குழந்தையை ஒரு கர்நாடக குரல் பள்ளியில் சேர்த்தார். வாய்ப்பாட்டு கயிற்சிக்கு செல்லும் வழியில் ஆந்திரப்பிரதேசத்தின் பூர்வீக பாரம்பரிய நடனமான குச்சிப்புடியின் தாள அடிச்சுவடுகளால் ஈர்க்கப்பட்ட இவர், குச்சிப்புடி நடனத்தை கற்க அனுமதி பெற்று அதனை கற்க ஆறம்பித்தார். [16] பல ஆண்டு கடுமையான பயிற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றிலிருந்து வரும் வெளிப்பாடு. குச்சிப்புடி பாரம்பரியத்தில் இவர் ஆழமாக அடித்தளமாக உள்ளார். மேலும் இந்த கலை வடிவத்தை அழகியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டை இழக்காமல் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதே இவரது நோக்கமாகும்.

பயிற்சி தொகு

இவரது நடன பயணம் இவரது ஆறாவது வயதில் குரு திருமதி. மது நிர்மலாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. அவரிடம் சில அடிப்படை பயிற்சிளையும் பின்னர் குரு சிரீ நரசய்யாவிடமும் கற்றுக்கொண்டார். இவரது அரங்கேற்ற நிகழ்ச்சி இவரது ஆறு வயதில் இருந்தது. குரு சிரீ மகங்காளி சூரியநாராயண சர்மா போன்ற புகழ்பெற்ற குருக்களின் கீழ் மூன்று ஆண்டுகள் தனது கலை முயற்சியைத் தொடர்ந்தார். அங்கு இவருக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது குரு "தேவபரிஜாதம்", "ராஜா ஹம்சா", "நாட்டியவிசாரதா" வேம்பதி சின்ன சத்தியம் மற்றும் சிறீ சிந்தா ஆதிநாராயண சர்மா ஆகியோரின் சீடரான சிறீ காழ வெங்கட்ட சுப்ரமண்யம் என்பவரால் இவர் ஒரு முழுமையான குச்சிப்புடி கலைஞராக வடிவமைக்கப்பட்டு குச்சிபுடியின் நிபுணராக மாற்றப்பட்டார்.

நிகழ்ச்சிகள் தொகு

பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், மானசா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 800க்கும் மேற்பட்ட தனி குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், பல முக்கிய அமைப்புகளின் பல விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார். பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். [17]

இந்தியாவின் தொலைகாட்ட்சியான தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞராக மானசா இருக்கிறார். இந்திய கலாச்சார அமைச்சகம், இவரது பணியை அங்கீகரித்து இவரது பயிற்சியைத் தொடர உதவித்தொகை வழங்கியது. மானசா 2011 ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் சர்வதேச நடன அமைப்பின் உறுப்பினராக இருந்தார். [18] கிரேக்கத்தில் நடன ஆராய்ச்சி தொடர்பான 31வது உலக காங்கிரசுக்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். [19]

கல்வி தொகு

நடனத்தைத் தவிர மென்பொருள் பொறியியலிலும் பட்டம் பெற்ற மானசா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் குச்சிப்புடிக்கு தனது நேரத்தை அர்ப்பணிப்பதற்காக அந்த வேலையை விட்டு வெளியேறினார். [20] [21]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Manasa Kuchipudi Dancer". www.narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  2. "Manasa Kuchipudi Dancer". events.fullhyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  3. "Manasa Kuchipudi Dancer". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  4. 4.0 4.1 "Manasa Kuchipudi Dancer". www.indianartandartists.com. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Manasa Kuchipudi Dancer". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  6. "Manasa Kuchipudi Dancer". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  7. "Manasa Kuchipudi Dancer". www.hindu.com. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. "Manasa Kuchipudi Dancer". www.hindu.com. Archived from the original on 2011-05-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-03. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. "Manasa Kuchipudi Dancer". www.achutamanasa.in. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  10. 10.0 10.1 "Website launch Sri Sri Ravishankar with her father". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  11. "Website launch Sri Sri Ravishankar with her father". www.dtfreshface.itimes.com. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  12. "Sri-Sri-Ravishankar-launches-website". www.achutamanasa.in. பார்க்கப்பட்ட நாள் 2013-04-05.
  13. "Achuta Manasa, Kuchipudi Dancer". thiraseela.com. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
  15. "Manasa along with her father". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
  17. "Experience in Kuchipudi". thiraseela.com. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  18. "Member of International Dance Council CID- UNESCO". www.cid-portal.org. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  19. "dancer-for-greece". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  20. "Education Details". degaarts.com. Archived from the original on 2013-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-31. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  21. "Education Details". www.achutamanasa.in. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.

வெளி இணைப்புகள் தொகு

  • achutamanasa.in, இவரது அலுவல்பூர்வ வளைதளம்

செயல்திறன், நேர்காணல் வீடியோக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதா_மானசா&oldid=3791939" இலிருந்து மீள்விக்கப்பட்டது