அஜு
அஜு என்பவர் மங்கோலியப் பேரரசு மற்றும் யுவான் அரச மரபின் ஒரு தளபதியும் வேந்தரும் ஆவார். மங்கோலிய உரியாங்கை இனத்தின் சர்சுட் பிரிவைச் சேர்ந்த இவரது தந்தை யுவான் அரசமரபின் தளபதியான உரியங்கடை ஆவார். இவரது தாத்தா செங்கிஸ் கானின் மதிப்பு மிக்க தளபதி மற்றும் நோயனான சுபுதை ஆவார்.
சுயசரிதை
தொகு1253ஆம் ஆண்டு இவர் தனது தந்தையைப் பின்பற்றினார். தலி இராச்சியத்தை வென்றார். 1258ஆம் ஆண்டு வடக்கு வியட்நாம் மீது உரியங்கடை மற்றும் அஜு 3,000 மங்கோலியர்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட தலி பழங்குடியினத் துருப்புக்களைக் கொண்டு படையெடுத்தனர். இவர்கள் வியட்நாமின் தலைநகரான தாங் லோங்கைக் (தற்போதைய ஹனோய்) கைப்பற்றினார். இருந்தும் வியட்நாமிய திரான் இராணுவத்திற்கு எதிரான கள யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பிறகு தங்களது படைகளுடன் பின்வாங்கினர்.[1] குப்லாய் கானின் ஆட்சி வரை இந்த உடன்பாடானது தொடர்ந்தது.[2]
இவரும் இவரது தந்தையும் 1258ஆம் ஆண்டு மோங்கே கான் மற்றும் குப்லாய் கானின் படைகளுக்கு ஆதரவு அளித்தனர். அஜு 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு தியூமனுக்குத் தலைமை தாங்கினார். இவரது தந்தை உடல் நலம் குன்றியிருந்தபோது இவரது தியூமனானது 2 ஆண்டுகளில் 13 நகரங்களைக் கைப்பற்றியது. சாங் அரசமரபின் 40,000 துருப்புகளை அழித்தது. சிங்சோவுவா மற்றும் யோவஜியு ஆக்கிரமிப்புக்குப் பிறகு உரியங்கடை இளவரசன் குப்லாயை எச்சோவுவில் சந்தித்தார்.
1260ஆம் ஆண்டு குப்லாய் அரியணைக்கு வந்தபோது அஜு தனது அரண்மனையிலேயே தங்கி இருந்தார். அடுத்த ஆண்டு லியான்சுயியில் யுவான் துருப்புகளுக்குத் தலைமை தாங்க இவருக்கு ஆணையிடப்பட்டது. 1261 முதல் 1275 வரை இவர் சாங் இராணுவங்கள் மற்றும் கடற்படையை நொறுக்கினார். சியாங்யாங் யுத்தத்தின்போது கோதான் கனரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இவர் பன்செங் நகரத்தைக் கைப்பற்றினார். அந்த நகரத்தின் ஆளுநர் தற்கொலை செய்துகொண்டார். 1276ஆம் ஆண்டு ஒக்தாயியின் பேரனான கய்டுவிடமிருந்து பெஷ்பலிக்கைத் தற்காக்க இவர் நியமிக்கப்பட்டார். இளவரசன் சர்பனின் தோல்விக்குப் பிறகு இவர் இறந்தார். சர்பன் தனது எசமானர் குப்லாய்க்கு எதிராக 1287ஆம் ஆண்டு கலகத்தில் ஈடுபட்டார். ஆனால் சில ஆதாரங்களின்படி அஜு வரும் வழியில் 1286ஆம் ஆண்டு இறந்தார்.
உசாத்துணை
தொகு- ↑ Connolly, P. (1998). p. 332.
{{cite book}}
: Missing or empty|title=
(help)[Full citation needed] - ↑ Grousset, René (1939). Empire of Steppes.; Atwood, Christopher P. E. (2004). "Aju". Encyclopedia of Mongolia and the Mongol Empire.