அஜ்மீரின் வரலாறு

அஜ்மீர் (Ajmer) என்பது மத்திய இராசத்தானிலுள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும் இது 11-12 ஆம் நூற்றாண்டுகளில் பிருத்விராஜ் சௌகானின் ஆட்சியின் போது சாகாம்பரி சௌகான்களின் இராச்சியத்தின் மையப் பகுதியாக இருந்தது..

இப்பகுதி இன்றைய அஜ்மீர் மாவட்டத்தை உள்ளடக்கியுள்ளது. மேற்கில் மார்வார், வடகிழக்கில் துந்தர், தென்கிழக்கில் அதோதி மற்றும் தெற்கில் மேவார் பகுதிகளால் எல்லைகளாக உள்ளது.

அஜ்மீர் மாகாணம்

தொகு

முகலாய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ், அஜ்மீர் ஒரு மத்திய சுபா (உயர்மட்ட மாகாணம்), தோராயமாக தற்போதைய இராசத்தானின் பெரும்பகுதி, அக்பரால் உருவாக்கப்பட்ட பன்னிரண்டு அசல் மாகாணங்களில் ஒன்றாகும். ( தில்லி (பின்னர் ஷாஜஹான்பாத்), ஆக்ரா (பின்னர் அக்பராபாத்), மால்வா, குசராத்து (சிந்து) மற்றும் முல்தான் சுபாக்கள்).

1818 ஆம் ஆண்டில், குவாலியர் மாநிலத்தின் மகாராஜாவான தௌலத்ராவ் சிந்தியா, அஜ்மீரை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். மேலும் அது வடமேற்கு மாகாணங்களுக்கு மாற்றப்படும் வரை 1836 வரை பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1 ஏப்ரல் 1871 அன்று புதிய அஜ்மீர்-மேர்வாரா மாகாணம் (அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என்றும் அழைக்கப்படுகிறது) உருவாக்கப்பட்டது. இந்நிலை 15 ஆகஸ்ட் 1947 வரை தொடர்ந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினர். மேலும் அஜ்மீர்-மேர்வாரா இந்திய மேலாட்சி அரசுக்கு வழங்கப்பட்டது. [1]

அஜ்மீர் மாநிலம்

தொகு

1950 ஆம் ஆண்டில், அஜ்மீர் மாநிலம் "பகுதி சி" மாநிலமாக மாறியது. இது இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தலைமை ஆணையரால் நிர்வகிக்கப்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க காங்கிரசு தலைவரான ஹரிபாவ் உபாத்யாயா அஜ்மீர் மாநிலத்தின் முதல்வராக 24 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை இருந்தார்.

அஜ்மீர் மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) ஃபாசல் அலி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. முந்தைய ஜெய்ப்பூர் மாவட்டத்தின் கிஷன்கர் துணைப்பிரிவு அஜ்மீர் மாவட்டத்தை உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட்டது. [2]

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Tara Boland-Crewe, David Lea, The Territories and States of India (Routledge, 2003), p. 213
  2. Sharma, Nidhi (2000). Transition from Feudalism to Democracy, Jaipur: Aalekh Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87359-06-7, pp. 197–201,205–6
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீரின்_வரலாறு&oldid=3785172" இலிருந்து மீள்விக்கப்பட்டது