அஜ்மீர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்
(அஜ்மேர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஜ்மீர் மாவட்டம் (Ajmer district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இங்கு இந்து, இசுலாம், சமணம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

ராஜஸ்தானின் ஆஜ்மீர் மாவட்டம்.

மாவட்டப் பிரிப்பு

தொகு

அஜ்மீர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு ஆகஸ்டு 2023ல் பியாவர் மாவட்டம் மற்றும் கேக்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[1]

மக்கட் தொகை

தொகு

இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 21,80,526 ஆகும்.[2]

  • இந்து-18,69,044
  • இஸ்லாம்-2,44,341
  • சமணம்-47,812

அமைப்பு

தொகு

அஜ்மீர் மாவட்டம் 8,481 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கே நாக்பூர் மாவட்டமும், கிழக்கே ஜெய்ப்பூர் மற்றும் டோங் மாவட்டங்களும் தெற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே பாலி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்_மாவட்டம்&oldid=4120533" இலிருந்து மீள்விக்கப்பட்டது